1001. | தொடைமலி கொன்றைதுறுஞ் சடை | | யன்சுடர் வெண்மழுவாட் | | படைமலி கையன்மெய்யிற் பகட் | | டீருரிப் போர்வையினான் | | மடைமலி வண்கமலம் மலர் | | மேன்மட வன்னம்மன்னி | | நடைமலி நன்னிலத்துப் பெருங் | | கோயில் நயந்தவனே. | | 7 |
1002. | குளிர்தரு திங்கள்கங்கை குர | | வோடரக் கூவிளமும் | | மிளிர்தரு புன்சடைமேல் உடை | | யான்விடை யான்விரைசேர் |
உடையவன்; பிரமதேவனது தலையை, பெருமை கெட அறுத்தவன். கு-ரை: "சிரம் பீடழித்தான்" என்றதனை, 'யானையைக் கோட்டைக் குறைத்தான்' என்பதுபோலக் கொள்க. நட்பாந்தன்மை - பலராலும் விரும்பப்படும் தன்மை. 7. பொ-ரை: இளமையான அன்னப் பறவைகள், நீர்மடைகளில் நிறைந்துள்ள, வளவிய தாமரை மலர்மேல் தங்கிப் பின் அப்பாற் சென்று நடத்தல் நிறைந்த திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமான், மாலையாக நிறைந்த கொன்றைமலர் பொருந்திய சடையை உடையவன்; ஒளிவீசுகின்ற வெள்ளிய மழுவாகிய ஆளும் படைக்கலம் நிறைந்த கையை உடையவன்; திருமேனியில் யானையினது உரித்த தோலாகிய போர்வையை உடையவன். கு-ரை: மழு நிறைதலாவது, அவனது அகங்கைக்கு ஏற்புடையதாய் இருத்தல். இனி அழகு நிறைந்திருத்தல் என்றுமாம். 8. பொ-ரை: நறுமணம் பொருந்திய, தளிர்களைத் தருகின்ற கோங்கு, வேங்கை, வளைவையுடைய குருக்கத்தி, சண்பகம் முதலிய பூமர வகைகள் பலவும் குளிர்ச்சியைத் தருகின்ற திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமான், தனது ஒளிவீசுகின்ற, புல்லிய
|