பக்கம் எண் :

1265
 
தளிர்தரு கோங்குவேங்கை தட

மாதவி சண்பகமும்

நளிர்தரு நன்னிலத்துப் பெருங்

கோயில் நயந்தவனே.

8

 

1003.கமர்பயில் வெஞ்சுரத்துக் கடுங்

கேழற்பின் கானவனாய்

அமர்பயில் வெய்தி அருச்

சுனற்கருள் செய்தபிரான்

தமர்பயில் தண்விழவில் தகு

சைவர்த வத்தின்மிக்க

நமர்பயில் நன்னிலத்துப் பெருங்

கோயில் நயந்தவனே.

9



சடையின்மேல், குளிர்ச்சியைத் தருகின்ற சந்திரன், கங்கை, பாம்பு, குராமலர், கூவிள இலை முதலிய இவைகளை உடையவன்; இடபத்தை ஊர்கின்றவன்;

கு-ரை: திங்கள் முதலியனவாகவும், கோங்கு முதலியனவாகவும் தொடர்ந்த பல்பெயர் உம்மைத் தொகைகளின் ஈற்றில் நின்ற உம்மைகள், ஏனையவற்றையும் தழுவும் எச்ச உம்மைகள் என்க.

9. பொ-ரை: உலகத்தவர் மிக்குள்ள தண்ணிய விழாக்களையுடைய, தகுதிவாய்ந்த சைவர்களாகிய, தவத்திற் சிறந்த நம்மவர் மிக்கு வாழ்கின்ற திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமான், நிலப் பிளப்புக்கள் மிகுந்த கொடிய கற்சுரத்தில், கொடிய பன்றியின்பின்னே வேடுவனாய்ச் சென்று அருச்சுனனோடு போராடுதலைப் பொருந்தி, அவனுக்குத் திருவருள் செய்த தலைவனாவான்.

கு-ரை: தவத்தின் மிக்காரை, "நமர்" எனத் தம்மொடு படுத்து அருளினமையின், "தமர்" என்றது, அயலவராகிய உலகத்தாரையாயிற்று. அவர்கள் பயிலுகின்ற விழா, உலகியலில் உள்ள மங்கல வினைகள். ஆகவே, தண்மை, மகிழ்ச்சியைக் குறித்ததாம். தவமாவது இறப்பில் தவமாகிய (சிவஞானபோதம் - சூ. 8 அதி. 1 வெ. 2) சிவபுண்ணியமே என்பது விளங்குதற்பொருட்டு, 'சைவராகிய தவத்தவர்' என்று அருளினார்.