பக்கம் எண் :

1266
 
1004.கருவரை போல்அரக்கன் கயி

லைம்மலைக் கீழ்க்கதற

ஒருவிர லால்அடர்த்தின் னருள்

செய்த வுமாபதிதான்

திரைபொரு பொன்னிநன்னீர்த் துறை

வன்திகழ் செம்பியர்கோன்

நரபதி நன்னிலத்துப் பெருங்

கோயில் நயந்தவனே.

10

 

1005.கோடுயர் வெங்களிற்றுத் திகழ்

கோச்செங்க ணான்செய்கோயில்

நாடிய நன்னிலத்துப் பெருங்

கோயில்ந யந்தவனைச்

சேடியல் சிங்கிதந்தை சடை

யன்திரு வாரூரன்

பாடிய பத்தும்வல்லார் புகு

வார்பர லோகத்துளே.

11

திருச்சிற்றம்பலம்


10. பொ-ரை: அலை மோதுகின்ற காவிரியாற்றினது நல்ல நீர்த்துறையை உடையவனும், சோழர்கோமகனும் ஆகிய அரசன் செய்த, திருநன்னிலத்துப் பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமான், அரக்கனாகிய இராவணன், கயிலாய மலையின்கீழ், கரியமலைபோலக் கிடந்து கதறும்படி ஒரு விரலால் நெருக்கிப் பின்பு அவனுக்கு அருள்புரிந்த உமை கணவனாகும்.

கு-ரை: "உமாபதி" என்றது, ஒரு பெயரளவாய் நின்றது, பொருதலுக்கு, 'கரை' என்னும் செயப்படுபொருள் வருவிக்க. நரபதி - மக்களுக்குத் தலைவன்; அரசன். இங்குக் குறிக்கப்பட்ட சோழ அரசர், கோச்செங்கணாயனார் என்பதனை, வருகின்ற திருப்பாடலுள் அறிக. இவரது வரலாற்றை, பெரிய புராணத்துட் காண்க.

11. பொ-ரை: தந்தங்கள் உயர்ந்து காணப்படுகின்ற வெவ்விய யானையின்மேல் விளங்குகின்ற கோச்செங்கட்சோழ நாயனார் செய்த, யாவரும் விரும்புகின்ற, திருநன்னிலத்தில் உள்ள