பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமானை, அழகு பொருந்திய சிங்கடிக்குத் தந்தையும், சடையனார்க்கு மகனும் ஆகிய நம்பியாரூரன் பாடிய இப்பத்துப் பாடல்களையும் பாட வல்லவர்கள், பரலோகத்துள் புகுவார்கள். கு-ரை: 'சிங்கடி' என்பது, 'சிங்கி' எனக் குறுக்கப்பட்டது. "சடையன்" என்றதன்பின், 'மகன்' என்பது எஞ்சிநின்றது. ஏயர்கோன் கலிக்காமர் புராணம் | | பலநாள் அமர்வார் பரமர்திரு | வருளால் அங்குநின்றும் போய்ச் | சிலைமா மேரு வீரனார் | திருநன் னிலத்துச் சென்றெய்தி | வலமா வந்து கோயிலினுள் | வணங்கி மகிழ்ந்து பாடினார் | தலமார் கின்ற தண்ணியல்வெம் | மையினா னென்னும் தமிழ்மாலை | 56 | | -தி. 12 சேக்கிழார் |
|