1007. | அருந்தவ மாமுனிவர்க் கரு | | ளாகியொர் ஆலதன்கீழ் | | இருந்தற மேபுரிதற் கியல் | | பாகிய தென்னைகொலாம் | | குருந்தய லேகுரவம் மர | | வின்னெயி றேற்றரும்பச் | | செருந்திசெம் பொன்மலருந் திரு | | நாகேச் சரத்தானே. | | 2 |
1008. | பாலன தாருயிர்மேற் பரி | | யாது பகைத்தெழுந்த | | காலனை வீடுவித்துக் கருத் | | தாக்கிய தென்னைகொலாம் | | கோல மலர்க்குவளைக் கழு | | நீர்வயல் சூழ்கிடங்கில் | | சேலொடு வாளைகள்பாய் திரு | | நாகேச் சரத்தானே. | | 3 |
2. பொ-ரை: குருந்த மரத்தின் பக்கத்தில் குராமரம், பாம்பினது பல்லைத் தாங்கினாற்போல அரும்புகளைத் தோற்றுவிக்க, செருந்தி மரம், செம்பொன்போலும் மலரைக் கொண்டு விளங்கும் திருநாகேச்சரத்தில் எழுந்தருளியிருப்பவனே, நீ, அரிய தவத்தையுடைய சிறந்த முனிவர்கள்மேல் கருணை கூர்ந்து, ஓர் ஆலமரத்தின் கீழ் இருந்து அறத்தைச் சொல்ல இசைந்ததற்குக் காரணம் யாது? கு-ரை: 'உலகத்தை உய்விக்குங் கருணைதானோ?' என்பதாம். "அருளாகி" என, பண்பின் வினை, பண்பின்மேல் நின்றது. "இயல்பாகியது" என்றது, அவரது கருத்திற்கேற்ற தன்மையனாகியது என்றவாறு. "கொல், ஆம்" அசைநிலைகள். 3. பொ-ரை: அழகிய குவளை மலர்களையும், செங்கழுநீர் மலர்களையும் உடைய வயல்களைச் சூழ்ந்துள்ள வாய்க்கால்களில், சேர் மீன்களும், வாளை மீன்களும் துள்ளுகின்ற திருநாகேச்சரத்தில் எழுந்தருளியிருப்பவனே, நீ, சிறுவன் ஒருவன்மேல் இரக்கங்கொள்ளாது பகைத்து, அவனது அரிய உயிரைக் கவர வந்த இயமனை அழிவித்து, அச்சிறுவனுக்கு அருளை வழங்கியதற்குக் காரணம் யாது?
|