பக்கம் எண் :

1270
 
1009குன்ற மலைக்குமரி கொடி

யேரிடை யாள்வெருவ

வென்றி மதகரியின் னுரி

போர்த்ததும் என்னைகொலாம்

முன்றில் இளங்கமுகின் முது

பாளை மதுஅளைந்து

தென்றல் புகுந்துலவுந் திரு

நாகேச் சரத்தானே.

4

 

1010.அரைவிரி கோவணத்தோ டர

வார்த்தொரு நான்மறைநூல்

உரைபெரு கவ்வுரைத் தன்

றுகந்தருள் செய்ததென்னே.



கு-ரை: 'அடைக்கலமாக அடைந்தவரைக் காக்கும் கருணைதானோ?' என்பதாம். 'பதைத் தெழுந்த காலனை' என்பதும் பாடம். கருத்து - திருவுள்ளம். அதனை ஆக்கியது, மார்க்கண்டேயர்பால் என்க.

4. பொ-ரை: இல்லங்களின் முன்னுள்ள இளைய கமுகமரத்தின் பெரிய பாளைகளில் கட்டப்பட்ட தேன் கூடுகளில் உள்ள தேனை, தென்றற் காற்றுத் துழாவி, தெருக்களில் வந்து உலவுகின்ற திருநாகேச்சரத்தில் எழுந்தருளியிருப்பவனே, நீ, பல குன்றுகளையுடைய இமயமலையின் மகளாகிய, கொடிபோலும் இடையையுடைய உமை அஞ்சும்படி, வெற்றியையும், மதத்தையும் உடைய யானையின் தோலை உரித்ததே யன்றி, அதனைப் போர்வையாகப் போர்த்துக் கொண்டதற்குக் காரணம் யாது?

கு-ரை: 'உலகிற்கு இடர் தீர்த்தலேயன்றி, தீர்க்க வல்லவன் என்றும் காட்டுதல்தானோ?' என்பதாம். "குன்று" என்றது, சூழ உள்ள பலவற்றை, மருதநிலமாதலின், முன்றில்களில் கமுக மரங்கள் உள்ளன என்க. கமுகம் பாளைகளில் வண்டுகள் தேன்கூடு அமைத்தல் இயல்பு.

5. பொ-ரை: மலைகள் தந்த சிறந்த மாணிக்கங்களையும், அவற்றில் உள்ள சந்தனக்கட்டை, அகிற்கட்டை என்பவைகளுடன் தள்ளிக்கொண்டு வந்து, அலைகள் மோதுகின்ற, குளிர்ந்த வயல்களையுடைய