பக்கம் எண் :

1271
 
வரைதரு மாமணியும் வரைச்

சந்தகி லோடும்உந்தித்

திரைபொரு தண்பழனத் திரு

நாகேச் சரத்தானே.

5

 

1011.தங்கிய மாதவத்தின் தழல்

வேள்வியி னின்றெழுந்த

சிங்கமும் நீள்புலியுஞ் செழு

மால்கரி யோடலறப்

பொங்கிய போர்புரிந்து பிளந்

தீருரி போர்த்ததென்னே

செங்கயல் பாய்கழனித் திரு

நாகேச் சரத்தானே.

6



திருநாகேச்சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே, நீ, அரையின்கண், அகன்ற கோவணத்தோடு பாம்பைக் கட்டிக்கொண்டு, ஒப்பற்ற நான்கு வேதங்களின் பொருளை, அன்று விரிவாகச் சொல்லி, அதனைக் கேட்டோரை விரும்பி, அவருக்கு அருள் செய்தற்குக் காரணம் யாது?

கு-ரை: 'முதல்நூலின் உண்மைப் பொருள் பிறழாது விளங்கக் கருதியதுதானோ?' என்பதாம். சிவபிரான் வேதத்தை அருளியதேயன்றி, அதன்பொருளை உரைத்த வரலாறுகளும் சொல்லப்படுதல் அறிக. 'அவ் வரை' எனச் சுட்டு வருவிக்க.

6. பொ-ரை: செவ்விய கயல்மீன்கள் துள்ளுகின்ற வயல்களையுடைய திருநாகேச்சரத்தில் எழுந்தருளியிருப்பவனே, நீ, நிலைபெற்ற பெரிய தவத்தினால், வேள்வித்தீயினின்றும் தோன்றிய சிங்கமும், நீண்ட புலியும், பருத்த பெரிய யானையோடே கதறி அழியும்படி மிக்க போரைச் செய்து கிழித்து, அவற்றினின்றும் உரித்த தோலைப் போர்த்ததற்குக் காரணம் யாது?

கு-ரை: 'உன்னை உணரும் உணர்வில்லாதோர்க்கும் உணர்வு உண்டாக்குதல்தானோ?' என்பதாம். தவம், தாருகாவன முனிவர்களுடையது என்க. அம்முனிவர்கள் செய்த வேள்வியில் புலியேயன்றி, 'சிங்கம், யானை' என்பனவும் தோன்றினமையை இத்திருப் பாடலால் அறிகின்றோம்.