பக்கம் எண் :

1272
 
1012.நின்றஇம் மாதவத்தை யொழிப்

பான்சென் றணைந்துமிகப்

பொங்கிய பூங்கணைவேள் பொடி

யாக விழித்தலென்னே

பங்கய மாமலர்மேல் மது

வுண்டுவண் தேன்முரலச்

செங்கயல் பாய்வயல்சூழ் திரு

நாகேச் சரத்தானே.

7

 

1013.வரியர நாணதாக மா

மேரு வில்லதாக

அரியன முப்புரங்கள் ளவை

ஆரழல் ஊட்டல்என்னே

விரிதரு மல்லிகையும் மலர்ச்

சண்பக மும்மளைந்து

திரிதரு வண்டுபண்செய் திரு

நாகேச் சரத்தானே.

8



'போர்த்தல்' என்பது, 'மறைத்தல்' என்னும் பொருளதாய், 'உடுத்தல், போர்த்தல்' இரண்டற்கும் பொதுவாய் நின்றது. யானை யுருவங்கொண்ட அசுரனை அழித்ததன்றி, இவ்வாறு கூறும் வரலாறும் உளதென்பதும் இங்கு அறியப்படுகின்றது.

7. பொ-ரை: (இப்பாடல், ஏடெழுதினோராற் பிழைபட்டதும் மிகையாகப் பிரதிகளில் சேர்ந்தது போலும்! இதனை, ஒன்பதாந் திருப்பாடல் கொண்டு உணர்க.)

8. பொ-ரை: சோலைகளில் திரிகின்ற வண்டுகள், மலரும் நிலையில் உள்ள மல்லிகை மலரிலும், சண்பக மலரிலும் மகரந்தத்தை அளைந்து, இசையைப் பாடுகின்ற திருநாகேச்சரத்தில் எழுந்தருளியிருப்பவனே, நீ, கீற்றுப் பொருந்திய பாம்பே நாணியாகவும், மாமேரு மலையே வில்லாகவும் கொண்டு, அரியவான மூன்று ஊர்களை, அரிய தீ உண்ணும்படி செய்ததற்குக் காரணம் யாது?

கு-ரை: 'நின்னை மறந்த குற்றத்தைத் தீர்த்தற்பொருட்டுத் தானோ?' என்பதாம். 'மலர்' என்றதனை, 'விரிதரும்' என்றதன் பின்னர்க்கூட்டி யுரைக்க.