1014. | அங்கியல் யோகுதனை யழிப் | | பான்சென் றணைந்துமிகப் | | பொங்கிய பூங்கணைவேள் பொடி | | யாக விழித்தல்என்னே | | பங்கய மாமலர்மேல் மது | | வுண்டுபண் வண்டறையச் | | செங்கயல் நின்றுகளுந் திரு | | நாகேச் சரத்தானே. | | 9 |
1015. | குண்டரைக் கூறையின்றித் திரி | | யுஞ்சமண் சாக்கியப்பேய் | | மிண்டரைக் கண்டதன்மை விர | | வாக்கிய தென்னைகொலோ | | தொண்டிரைத் துவணங்கித் தொழில் | | பூண்டடி யார்பரவும் | | தெண்டிரைத் தண்வயல்சூழ் திரு | | நாகேச் சரத்தானே. | | 10 |
'வரிமாமேரு' என்பதொரு பாடம் காணப்படுகின்றது; அதனை, 'வரை மாமேரு' என்று ஓதிக்கொள்ளுதல் சிறக்கும். 9. பொ-ரை: குளங்களில், தாமரை மலர்களின் மேல் வண்டுகள் தேனை உண்டு இசையைப் பாட, செவ்விய கயல்மீன்கள், நிலைபெற்று நின்று துள்ளுகின்ற திருநாகேச்சரத்தில் எழுந்தருளியிருப்பவனே, நீ, கயிலையின்கண் செய்த யோகத்தைக் கெடுத்தற்குச் சென்று சேர்ந்து, பெரிதும் சினங்கொண்ட, மலர்க்கணையை உடைய மன்மதன் சாம்பராகும்படி ஒரு கண்ணைத் திறந்ததற்குக் காரணம் யாது? கு-ரை: 'உனது காமமின்மையைக் காட்டுதற்குத் தானோ?' என்பதாம். "அங்கு" என்றது, பண்டறி சுட்டு. யோகு செய்த இடம் திருக்கயிலையாதலின், "அங்கு" என்றும், 'சென்று' என்றும் அருளிச் செய்தார். 10. பொ-ரை: அடியார்கள், அடிமைத்தொழில் பூண்டு, ஆரவாரித்து வணங்கித் துதிக்கின்ற, தெளிந்த அலைகளையுடைய, குளிர்ந்த வயல்கள்
|