1016. | கொங்கணை வண்டரற்றக் குயி | | லும்மயி லும்பயிலும் | | தெங்கமழ் பூம்பொழில்சூழ் திரு | | நாகேச் சரத்தானை | | வங்க மலிகடல்சூழ் வயல் | | நாவல வூரன்சொன்ன | | பங்கமில் பாடல்வல்லா ரவர் | | தம்வினை பற்றறுமே. | | 11 |
திருச்சிற்றம்பலம்
சூழ்ந்த திருநாகேச்சரத்தில் எழுந்தருளியிருப்பவனே, மூர்க்கரும், மனவலிமையுடையவரும் ஆகிய, உடையின்றித் திரியும் சமணரும், புத்தரும் என்னும் பேய்போல்வாரை, அவர் கண்டதே கண்ட தன்மையைப் பொருந்தச் செய்ததற்குக் காரணம் யாது? கு-ரை: 'அவர்களது வினைதானோ?' என்பதாம். 'விரவாகியது' என்பது பாடம் அன்று. "தொழில் பூண்டு" என்றதனை, 'தொண்டு' என்றதன் பின்னர்க் கூட்டியுரைக்க. 11. பொ-ரை: மகரந்தத்தை அடைந்த வண்டுகள் ஒலிக்க, குயிலும், மயிலும் பாடுதலையும், ஆடுதலையும் செய்கின்ற, தேனினது மணங் கமழ்கின்ற பூஞ்சோலைகள் சூழ்ந்த திருநாகேச்சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற இறைவனை, மரக்கலங்கள் நிறைந்த கடல்போலச் சூழ்ந்துள்ள வயல்களையுடைய திருநாவலூரானாகிய நம்பியாரூரன் பாடிய, குறையில்லாத இப்பாடல்களைப் பாட வல்லவர்களது வினை பற்றறக் கழியும். கு-ரை: 'கொங்கமர்' என்பதே பாடம் போலும்! 'தேங்கமழ்' என்பது குறுகி நின்றது. 'தெங்கணை பூம்பொழில்' என்பதும் பாடம். 'கடல்சூழ்' என்றது வினையுவமம். "நாவலவூரன்" என்பதில் வந்த அகரம், சாரியை. 'வயல் நாவலாரூரன்' என்பதும் பாடம். "அவர்" பகுதிப் பொருள் விகுதி.
|