தீர்த்தம் : சிவகங்கை. இத்திருவஞ்சைக்களத்துக்கு வடக்கே கொடுங் கோளூரும், தெற்கே கோட்டைப் புறமும், மேற்கே மேற்றலையும், கிழக்கே புல்லூற்றும் இருக்கின்றன. கொடுங்கோளூரில் பகவதி அம்மன் கோயில் இருக்கின்றது. இதனையே கண்ணகி கோயில் என்பர். அஞ்சைக்களத்து அப்பர் கோயில் மலையாள முறையில் கட்டப்பட்டுள்ளது. கல்வெட்டு: 1 இக்கோயிலிலிருந்து அரசியலார் ஒரே கல்வெட்டை வெளியிட்டிருக்கின்றனர். அது மிகவும் சிதைந்து விட்ட படியால் அதன் கருத்தை அறிந்து கொள்ளமுடியவில்லை. அக் கல்வெட்டின் மூலம் கல்வெட்டுத் துறையாளர் வெளியிட்டவாறு கொடுக்கப்பட்டுள்ளது. (1) ஸ்ரீ தநுவில் வியாழந் நில்க்க செய்த . . . . .வது திருவஞ்சக்களத்து இராயிங்ஙப் பெருந்தச்சனுக் (2) . . . . . . பெருந்தச்சனு அமச்சுள்ளுறுத்திக் கோயிலதிகாரிகள் திருவுள்ளஞ் செய்து கொடுத்தருளிய புரையடத்தின் இறை முப்பதிஞாழி (3) . . . . . . செல்வாரே கொடுக்க கடவியார் இப்புரையடத்தில்ச் சென்று புக்கு விலக்குமவனு பொருள்க்கவிருமவனு அய்ம்பத்திருகழஞ்ஞு பொன் (4) . . . . . .யிடு ஒள்ளொருத்தன் புகில் இடையிடும் விடக்கட (5) . . . . . . திருவஞ்சக்(கள)
2. திருஅதிகை வீரட்டம் நடுநாட்டுத்தலம். கடலூர் - சென்னை இருப்புப் பாதையில் பண்ணுருட்டி தொடர்வண்டி நிலையத்துக்கு அருகில் உள்ளது.
1 A.R.E. 1895 No. 225; and S.I.I. Vol. 789.
|