பக்கம் எண் :

150
 

குடியினன் ஒருவன் சூரியதேவன் கோயில் கட்டினான் என்றும், அதற்கு வழிபாடு நடத்த முப்பது காசு தந்து அதற்கு 6 மா. நிலமும் விடப்பெற்றது என்றும் தெரிவிக்கிறது.

5. முதற்குலோத்துங்கன் காலத்தில் வழிபாட்டிற்காக நிலம் தரப்பட்டது.

6. விக்கிரமசோழன் (கி. பி. 1125) காலத்தில் திருப்புத்தூர் அழகிய தேவருக்கு ஒருவிளக்குக்காக பணம் தரப்பெற்றது.

7. கோச்செங்கட்சோழன் : ஒருகல்வெட்டில் குலோத்துங்கச் சோழவளநாட்டு அழகார் திருப்புத்தூர் என்று ஊர்ப்பெயர் குறிக்கப் பெற்றுள்ளது.

4. திருஆமாத்தூர்

பசுக்களுக்குத் தாயாக இறைவன் இருந்து அருளும் தலம். இங்கே, பசு என்றது உயிர்த்தொகுதியை.

விழுப்புரம் தொடர்வண்டி நிலையத்திற்கு வடமேற்கில் 6 கி. மீ. தூரத்தில் பம்பையாற்றின் வடகரையிலுள்ளது. விழுப்புரம் பேருந்து நிலையத்திலிருந்து சூரப்பட்டு நகரப் பேருந்தில் திருவாமாத்தூர் செல்லலாம். இது நடுநாட்டுத் தலங்களுள் ஒன்று.

இறைவர் : அழகிய நாதர். இத்திருப்பெயரைத் திருக்குறுந் தொகையில் அப்பர்பெருமான் எடுத்து ஆண்டிருப்பது மகிழ்தற்கு உரியதாகும்.

இறைவி : முத்தாம்பிகை, முத்தைவென்ற முறுவலாள். முத்தார்நகை அழகுடையார் என்பர் அருணகிரிநாதர்.

தீர்த்தம் : பம்பை ஆறு.

தலவிருட்சம் : வன்னிமரம்.

பிருங்கி முனிவர் சிவபெருமானையே வழிபடுபவர். அம்மையாரை வழிபடாதவர். அம்மையார் ஒருபாகத்தைப் பெற்ற போதும் வண்டு உரு எடுத்துத் துளைத்துச் சிவனையே வழிபட்டார். அதனால்