தோற்கச்செய்த தலம். இதனைத் தேவாரம் 'ஆடினார் காளிகாண ஆலங்காட்டடிகளாரே' என்று சொல்லும். பதஞ்சலி கார்க்கோடகன் என்ற பெயரோடும், வியாக்கிரபாதர் முஞ்சிகேசர் என்ற பெயரோடும் எப்பொழுதும் நடனதரிசனம் செய்வர். கைலைக்குத் தலையாலே நடந்துசென்ற காரைக்காலம்மையார், என்றும் திருவடிக்கீழ் ஆனந்த தாண்டவ தரிசனத்தோடு அமர்ந்திருக்கின்றார். திருஞானசம்பந்த சுவாமிகள், அம்மையார் தலையாலே நடந்த தலமென்று மிதித்தற்கு அஞ்சிப் புறம்போக, இறைவன் கனவில் 'எம்மைப் பாட மறந்தனையோ' என்று கேட்டுப் பாடல்பெற்ற தலம். இங்கே வாழ்ந்த வேளாளர்கள் பழையனூர் நீலிக்குக்கொடுத்த வாக்குப்படி உயிர் கொடுத்து, உண்மையை நிலை நாட்டினார்கள். இதனைத் 'துஞ்ச வருவாரும்' என்னும் பதிகத்தில் ஞானசம்பந்த சுவாமிகள் விளக்கியுள்ளார்கள். சுவாமிபெயர் : தேவரசிங்கப்பெருமான், ஊர்த்துவ தாண்டவேசுவரர். அம்மைபெயர் : வண்டார்குழலி. தீர்த்தம் : முத்திதீர்த்தம். தலவிருட்சம் :பலா. கல்வெட்டு: அரசியலார் படியெடுத்த கல்வெட்டுக்கள் 52 உள்ளன. இத்தலம் வடகரை மணவிற்கோட்டத்து மேல்மாலை பழையனூர் நாட்டுத் திருவாலங்காடு என்றும், ஜெயங்கொண்ட சோழமண்டலத்து மேல்மாலையாகிய பழையனூர் நாட்டுத் திருவாலங்காடென்றும் வழங்கப்படுகின்றது. பெருமான் திருவாலங்காடு உடைய நாயனார் எனக் குறிப்பிடப்படுகிறார். இத்தலத்துள் ஏதோ ஒரு மண்டபத்தை மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் இருந்த அம்மையப்பன் பழியஞ்சிய பல்லவராயன் கட்டினான் 1. நடராஜப்பெருமான் திருவரங்கில் அண்டம் உற நிமிர்ந்தருளிய நாயனார் எனக் குறிப்பிடப்படுகிறார். இவருக்கு இலத்தூர் நாட்டு அரும்பாக்கத்துக் குன்றத்தூர்க் கோட்டத்து அறநிலை விசாரகன் திரைலோக்கிய மன்னன் வத்ஸராஜன் என்பவன் விளக்குக்காக நிலமளித்தான்2. அம்மை வண்டார் குழலி நாச்சியார் எனவும், பிரமராம்பாள் எனவும் குறிப்பிடப்படுகிறார் 3. ஏனைய கல்வெட்டுக்கள் நிலம் விற்றதையும், தண்ட நாயகருக்கு உத்தரவிட்டதையும் அறிவிப்பன. 477, 476 என்ற விஜய
1 468 of 1+B36905, 2 482 of 1905, 3 495 of 1905
|