பக்கம் எண் :

175
 

சாத்தனூர்க்கு ஸ்ரீ சதுர்வேதிமங்கலம் என்ற பெயர் வழங்கி வந்ததாக முதலாம் இராஜேந்திர சோழதேவரின் கல்வெட்டில் குறிக்கப் பெற்றுள்ளது. இந்த ஸ்ரீ சதுர்வேதிமங்கலத்துக்கு வடக்கில் சிற்றானைச் சூர் என்னும் ஊர் இருந்தது. 1

9. திருஆனைக்கா

யானை பூசித்துப் பேறு எய்தியதால் இப்பெயர் பெற்றது.

திருவானைக்கா திருச்சிராப்பள்ளிக்கு அருகில் காவிரி வட கரையில் விளங்கும் தலம். திருச்சிராப்பள்ளியிலிருந்து நகரப் பேருந்துகள் பல உள்ளன.

இறைவரின் திருப்பெயர் : நீர்த்திரள்நாதர். இத்திருப்பெயரை இவ்வூர்த் திருத்தாண்டகத்தில் அப்பர்பெருந்தகையார் "செழுநீர்த்திரளைச் சென்று ஆடினேனே" என எடுத்து ஆண்டுள்ளார். இதுவன்றி ஜம்புகேசுவரர் என்று வேறு திருப்பெயரும் உண்டு. வெண்ணாவல் மரத்தின் அருகில் எழுந்தருளியிருப்பதால் இப்பெயர் பெற்றார். (ஜம்பு - நாவல்) இறைவியாரின் திருப்பெயர்: அகிலாண்டநாயகி.

தலவிருட்சம் வெண்ணாவல்.

தீர்த்தங்கள் காவிரி, இந்திரதீர்த்தம், சந்திரதீர்த்தம் என்பன.

கோயில் ஐந்துபிராகாரம் கொண்ட பெரியகோயில், ஆயிரங்கால் மண்டபம் உண்டு. முதல் மண்டபம் மிகச் சிறந்தது. சுவாமி சந்நிதி மேற்கு, அம்மன் சந்நிதி கிழக்கு. சுவாமி பிராகார மண்டபத்தில் கிழக்கு நோக்கியபடி நிஷ்டாதேவி உருவம் இருக்கிறது. இதனை, சனீஸ்வரர் என்று தவறாக எழுதி இருந்தார்கள். நான்காவது மதில் (திருநீற்றுமதில்) மிகப்பெரியது. இது பஞ்சபூதத் தலங்களுள் அப்புத்தலம் ஆகும். (அப்பு - தண்ணீர்) சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் இடத்தில் நீர் ஊறி வருவது இன்றும் காணத்தக்கது. முற்பிறப்பில் சிலந்தியாயிருந்து சிவபெருமானை


1 குறிப்பு: திருவாவடுதுறை ஆதீனத்தில் இருபத்தொன்றாம் பட்டத்தில் இனிது எழுந்தருளி அருளாட்சி நடத்திய ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிக பரமாசாரிய சுவாமிகளின் கட்டளைப்படி இக்கோயில் கல்வெட்டுக்களைப் படி எடுத்து எழுதி, அங்குக் குருபூசை விழாவில் ஆற்றிய சொற்பெருக்கின் சுருக்கமே இங்குக் கொடுக்கப் பெற்றுள்ளது.