பக்கம் எண் :

177
 

நாயகி மாலையையும் பாடியுள்ளனர். இவைகள் இரண்டும் அச்சேறி வெளிவந்துள்ளன.

தலத்தின் பெருமையை உணர்த்தும் புராணப்பாடல் ஒன்று பின்வருமாறு :

"மேதகைய பயன்விழைவோர் ஞானதலத்

துறைகுவது மேவாதாயின்

ஓதுக அத்தலப்பெயரை யாங்கதுவு முற்றாதே

லுரைப்பக்கேட்க

காதலொடு கேட்டவரு மூவகைய பாதகமுங்

கடந்துமேலாம்

போதமுணர்ந் தெமதடியிற் புக்கிருப்ப ரிஃதுண்மை

பொலங்கொம்பன்னாய்".

- திருவானைக்காப் புராணம் - தலவிசேடப் படலம்.

 

கல்வெட்டு:

இக்கோயிலில் பிற்காலத்துச் சோழ மன்னர்கள், பாண்டியர்கள், ஹொய்சலர்கள், விஜயநகர அரசர்கள், மதுரை நாயக்கர்கள் இவர்கள் காலங்களில் பொறிக்கப்பெற்ற நூற்று ஐம்பத்து நான்கு கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இவைகளெல்லாம் சரித்திர சம்பந்தமான உயரிய செய்திகளைத் தெரிவிக்கின்றன.

இக்கோயில் சிவபெருமான் திருவானைக்கா உடையார், திருவானைக்கா உடைய நாயனார், மகாதேவபட்டர் என்னும் திருப்பெயர்களாலும், அம்பிகை அகிலாண்டநாயகி என்னும் பெயராலும் குறிக்கப்பெற்றுள்ளனர். இக்கோயில் முதற் பிராகாரத்துத் துவார பாலகர் இருவரையும் எழுந்தருளுவித்தவர் இருங்கொளப்பாடி வளநாட்டுக் கருப்பூரில் இருந்த இளைய நயினார் மகனார் தெய்வங்கள் பெருமாள் ஆவர். இச்செய்தி அத்துவார பாலகர்களின் அடிப்பீடங்களில் பொறிக்கப்பட்டிருக்கின்றது.

நான்காம் பிராகாரத்தில் அகிலாண்டநாயகி அம்மன் கோயிலின் முன் உள்ள பசுபதீஸ்வரம் உடையாரை எழுந்தருளுவித்தவர் நீலகண்ட நாயக்கராவர். இச்செய்தி ஹொய்சல வம்சத்தைச் சேர்ந்த வீர ராமநாததேவரின் பதினான்காவதாண்டுக் கல்வெட்டால் தெரியவருகின்றது. இக்கோயிலின் உற்சவ மண்டபத்தைக் கட்டியவர்