பக்கம் எண் :

188
 

நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில் குற்றாலம் தொடர்வண்டி நிலையத்துக்கு வடக்கே சுமார் ஐந்து கி. மீ. தொலைவில் இருக்கிறது.

1 கல்வெட்டு:

இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவர் திருவெதிர் கொள்பாடி உடையார் என்னும் திருப்பெயரால் கூறப்பெற்றுள்ளார்.

திருக்கோயில் கட்டப்பட்ட காலமும் அதைக் கட்டியவரும்: - இப்பொழுதுள்ள கற்கோயில் திரிபுவனச் சக்கரவர்த்திகள் குலோத்துங்க சோழ தேவர் காலத்திலோ அல்லது அவர்க்குச் சற்று முன்னரோ கட்டப்பட்டது என்று தெரிகின்றது. அதைக் கருங்கல்லால் கட்டியவன் கீரனூர் கிழவன் அரசுக் குடியான் திருநீலகண்டன் சேரமான் தோழன் ஆவன்.

இச்செய்தி, ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழதேவர்க்கு யாண்டு மூன்றாவது விருதராஜ பயங்கர வளநாட்டு குறுக்கைநாட்டு உடையார் திருவெதிர் கொள்பாடி உடையார் தேவதானத்துக் காணியுடைய இன்னாயனார் கோயில், இத்திருக் கற்றளி செய்த கீரனூர் கிழவன் அரசுக்குடியார் திரு நீலகண்டர் சேரமான் தோழன் இராவைச் சந்திக்கு வைத்த சந்தி விளக்கு ஒன்று. ஒன்றும் சந்திராதித்தவரை உமையஞ் செலுத்தக் கடவோம். இச்சிவப் பிராமணரோம் என்னும் கல்வெட்டால் புலப்படுகின்றது. (இக்கல்வெட்டு அர்த்தமண்டபத்தின் தென்புறச் சுவரில் இருக்கின்றது)

இக்கோயிலில் உள்ள திருக்காமக்கோட்டத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவியாரின் திருப்பெயர் பெருங்கருணைப் பிராட்டியார் என்பதாகும். இச்செய்தி, "ஸ்வஸ்திஸ்ரீ கோச்சடையபன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் சுந்தரபாண்டிய தேவர்க்கு யாண்டு பதினொன்றாவது இந்நாயனார் தேவ . . . ஞாயிற்றுக்கிழமையும் பெற்ற அத்தத்து நாள் இக்கோயில் திருக் காமக்கோட்டமுடைய பெருங்கருணைப் பிராட்டியார் கொடையார் கோப்பெருஞ்சிங்கர்க்குப் பதினொன்றாவதும், பன்னிரண்டாவதும், பதின்மூன்றாவதும் முன்னின்று கடமை இறாதே ஓடிப்போதினில்


1 See the Annual Reports on Sputh Indian Epigraphy for the year 1914 No. 24 - 28.