இங்குப் பாடிய "பூணாண் ஆவதோர் அரவம்" என்று தொடங்கும் பதிகத்தில் ஒன்பதாம் பாடலில் "தொண்டாடித் தொழுவார்தொழக்கண்டு தொழுதேன் என் வினைபோக" என்ற தொடரும், பத்தாம் பாடலில் "சேடார் பூங்குழல் சிங்கடி அப்பன் திருவாரூரன்" என்ற தொடரும் நம் நினைவில் என்றும் நிறுத்தத் தக்கனவாம். வேதாகமக் கலைகளை உணர்ந்த அந்தணர்கள் ஒமப்புகையால் கலிகடிந்து வாழும் கலயநல்லூர் என்கிறார். வழிபடுதற்குரிய நேரம் காலையும் மாலையும் என்பதனை எட்டாம் பாடல் இறுதி அடிகளால் குறிப்பிட்டுள்ளமை கண்டு நாமும் கடைப்பிடிக்கலாம். "காலையிலும் மாலையிலும் கடவுள் அடி பணிந்து கசிந்த மனத்தவர் பயிலும் கலயநல்லூர் காணே" என்பது அப்பாடல் பகுதி. நம் திருநாவலூர் : ஆரூரர் திருவாரூரிலிருந்து தொண்டைநாட்டுத் தலங்களை வழிபடச் செல்லுங்கால் நடுநாட்டுத் தலமாகிய தாம் அவதரித்த திருநாவலூரை வணங்கி வழிப்பட்டுப் பதிகம் பாடினார். திருமால் நான்முகன் இந்திரன் உள்ளிட்டார் குற்றேவல் செய்யச் சிவபெருமான் திரிபுரத்தைச் சிரித்து எரித்தார். வெண்ணெய் நல்லூரில் வைத்துத் தன்னை ஆளாகக் கொண்டார். இவர் எழுந்தருளியுள்ள இடம் நம் திருநாவலூர் என்று பாடியுள்ளார். இக்கருத்துக்கள் "கோவலன் நான்முகன்" என்ற பதிகத்துள் இடம்பெற்றுள்ளன. மேலும் (தி. 7 ப. 17) "நாதனுக்கு ஊர் நமக்கு ஊர் நரசிங்க முனையரையன் ஆதரித்து ஈசனுக்கு ஆட்செய்யும் ஊர் அணிநாவலூர்" என்று நிறைவுப் பாடலில் கூறியுள்ளமையைக் காணலாம். நம் திருநாவலூர் என்று உரிமையுடன் தாம் தோன்றிய நாவலூரைக் குறிப்பிட்டதேபோல் திருநின்றியூரையும் நம் திருநின்றியூர் என்று குறிப்பிட்டுள்ளமையை, அற்றவனார் அடியார்தமக்கு ஆயிழைபங்கினராம் பற்றவனார் எம்பராபரர் என்று பலர் விரும்பும் கொற்றவனார்குறுகாதவர் ஊர் நெடுவெஞ்சரத்தால் செற்றவனார்க் கிடமாவது நம் திருநின்றியூரே. (தி. 7 ப. 19 பா. 1) என்ற பாடலால் அறியலாம். நாம் இவர்க்கு ஆட்படோமே: திருஎதிர்கொள்பாடியைத்தொழுது திருவேள்விக்குடிப்
|