பக்கம் எண் :

190
 

சிவபெருமானுக்கு உரியது என்று பெறப்படுகின்றது.

அளிக்கப்பெற்ற நிவந்தங்கள்: இத்திருவெதிர்கொள்பாடி உடையார் திருக்கோயிலைக் கற்றளி செய்த கீரனூர் கிழவன் அரசுக் குடியான் திருநீலகண்டன் சேரமான் தோழன் இப்பெருமானுக்குச் சந்தி விளக்கு ஒன்றைக் குலோத்துங்கசோழதேவரின் மூன்றாம் ஆட்சியாண்டில் வைத்துள்ளான். இக்கோயிலிற் பள்ளியறை நாச்சியாரை எழுந்தருளுவித்த கண்ணமங்கலம் வீமப்பிள்ளையின் மனைவியார், உதையங்குடியில் தாம் சீதனமாகப்பெற்று அநுபவித்து வந்ததும், 'இரு கரையன்' என்று பேர் கூவப்பெற்றதுமான நிலத்தில் காலே சின்னத்தைப் பள்ளியறை நாச்சியார்க்குத் திருவமுதுக்காகக் கொடுத்துள்ளனர்.

இக்கோயில் மாடாபத்யமாய் அநுசங்காத்த பூண்டி உடையான் விசுவேசுரன், திருவேள்விக்குடி மணவாளநம்பி தேவதானம் திருவேள்விக்குடிநல்லூரில், கீழைக்குழலி சிங்கவிளாகம் என்னும் பெயர்கள் வாய்ந்த நிலங்களில் மூன்றேமுக்காலே நாலுமா அரைக் காணி நிலத்தை வாங்கி இந்நாயனார்க்குத் திருநாமத்துக் காணியாகக் கொடுத்துள்ளான். இது நிகழ்ந்தது சுந்தரபாண்டிய தேவர்க்கு யாண்டு பதினொன்றாவது இடபநாயிற்று அபர பட்சத்து ஞாயிற்றுக்கிழமையும் சதுர்த்தி திதியும் பெற்ற ரோகிணி நாளாகும்.

இத்திரு எதிர்கொள்பாடிக் கோயிலுக்கு அளிக்கப் பட்டனவாகத் திருவேள்விக்குடிக் கல்வெட்டினால் அறியப்படும் நிவந்தங்கள்: இராசேந்திர சிங்கவளநாட்டுக் குறுக்கைநாட்டு இடையாற்று வெள்ளான் வெண்காடன் சாத்தனும், மந்தி மன்றனும், குப்பை கூத்தனும், அவனி மாதேவடிகளும், மணஞ்சேரி அழகனும், மணஞ்சேரிசோலைகேசனும் ஆகிய இவர்கள் 'இடையாற்று மணம்பு' என்று பேர் கூவப்பட்ட நிலத்தில் நான்குமா முக்காணி நிலத்தை இறையிலியாகக் கொடுத்துள்ளனர்.

இராசேந்திரசிங்க வளநாட்டு நல்லாற்றூர் நாட்டு ஆலங் குடியில் 'முடப்பந்தூறு' என்று பேர் கூவப்பட்ட நிலத்தின் வடக்கில் ஒன்றே இரண்டுமாவில் கீழ்க்கடை நிலம் ஆறுமா ஸ்ரீ பலி புறமாகக் கொடுக்கப்பட்டுள்ளது (புறம் - நிவந்தம்). இந்நிலத்தின் நான்கெல்லையாவது - கீழ் பாற்கெல்லை மூலங்குடி கண்ணாற்றுக்கு மேற்கும், தென்பாற்கெல்லை ஆலங்குடி நிலத்துக்குவடக்கும், மேல்பாற்கெல்லை . . . . நிலத்துக்குக் கிழக்கும், வடபாற்கெல்லை குறுக்கை நாட்டுப் பிரமதேயம் முருகவேள் மங்கலத்துக்குத் தெற்கும் இவ்