பக்கம் எண் :

191
 

விசைந்த பெருநான்கெல்லையுள் அகப்பட்டதாகும் இராசேந்திரசிங்க வளநாட்டுக் குறுக்கை நாட்டுச் சோத்தமங்கலத்தில் ஏழுமாநிலம் இத்திருவெதிர்கொள்பாடி உடையார்க்குத் திருநந்தவனப் புறமாகப் பாண்டூர்க்கிழவன் குணதீரன் என்னும் வாணதேவன் முதலானோரால் கொடுக்கப்பட்டுள்ளது. உய்யக்கொண்டார் வளநாட்டுப் பேராவூர் நாட்டுக் கூடலூரில் முதல் இராசராச சோழனின் இருபத்தேழாம் ஆண்டில் அவ்வூர்க்கிழவன் மாறன் செட்டியாலும் நிலங்கள் விடப்பட்டிருந்தன.

வரலாற்றுப் பகுதிகள்: இவ்வெதிர் கொள்பாடிக்கு உரியன வாய்த் திருவேள்விக்குடிக் கல்வெட்டில் குறிக்கப் பெற்றுள்ள நிவந்தங்களில் பெரும்பாலான முதல் இராசராசசோழரின் இருபது, இருபத்து நான்கு, இருபத்தேழாம் ஆண்டுகளில் விடப்பட்டனவாகும். ஆனால் அவை அம்மன்னரின் மகனாகிய கங்கைகொண்ட சோழனின் ஆறாம் ஆட்சியாண்டில் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளன. இங்ஙனம் ஒரு அரசன் காலத்தில் விடப்பட்ட நிவந்தங்களின் மூல ஓலை அல்லது செப்பேடுகளைப் பார்த்து, பின்வந்த அரசர்கள் கல்லிற் செதுக்கி வைப்பது வழக்கம் என்பதைத் திருப்பனந்தாள் செஞ்சடையப்பர் கோயிற் கல்வெட்டுக்களினாலும் காணலாம்.

'உடையார் ராஜேந்திரசோழதேவர்க்கேய் யாண்டு இரண்டாவது உடையார் ராஜராஜதேவர் தேவியார் ராஜராஜ மண்டலத்துத் திருஅரங்கன் அருமொழி' என்னும் திருவேள்விக்குடி கல்வெட்டுப் பகுதியால் முதலாம் இராசராச சோழர்க்கு அருமொழி என்பார் தேவியார் என்பதும், அவர் பாண்டியர் மகளார் என்பதும் அறியலாகும். இவ்வம்மையார் திருவெதிர்கொள்பாடி இறைவர்க்கு ஐம்பது பசுக்களை விட்டிருந்தனர்.

திருவெதிர்கொள்பாடி என்னும் ஊர் திருவெருதுபாடி என்று திரிந்து வழங்கிவந்ததை திருவேள்விக்குடிக் கல்வெட்டு அறிவிக்கின்றது.

13. திருஐயாறு

கி. பி. 7 ஆம் நூற்றாண்டு முதல் 9 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி முடியத் திருவையாற்றிலிருந்து கண்டியூர் வரை பரவியிருந்தது. கண்டியூர், திருச்சோற்றுத்துறை இவைகளைப் பாடிய தேவார ஆசிரியர்கள் இவ்விரு பதிகளையும் காவிரிக்கரையிலுள்ள