பக்கம் எண் :

192
 

பதிகளாகவே குறிப்பிட்டுள்ளனர்.

திருவையாற்றுக்கும் கண்டியூர்க்கும் இடையிலுள்ள குடமுருட்டியாறு அக்காலத்தில் இல்லை. அது காவிரியிலிருந்து கும்பகோணத்திற்குக் கிழக்கே பிரிந்துசென்றது. கடுவாய் என்பது குடமுருட்டியாறாகும். இக்கடுவாய்க்கரையிலுள்ள புத்தூரை, கடுவாய்க்கரைப்புத்தூர் என்று சிவநெறிகாட்டியருளிய குரவர்கள் குறிப்பிட்டுள்ளதுபோல, அக்காலத்தில் குடமுருட்டியாகிய கடுவாயாறு கண்டியூர்ப்பக்கமாக ஓடியிருக்குமானால் அதைக் கடுவாய்க்கரைக் கண்டியூர் என்றே கூறியிருக்கவேண்டுமே! அங்ஙனம் குறிப்பிடாததன் காரணத்தையும் உணரவேண்டும். இதற்குப் பிற்காலத்தேதான், திருக்காட்டுப்பள்ளியைத் தலைப்பாகக் கொண்டு, குடமுருட்டியாற்றை வெட்டி, கும்பகோணத்திற்குக் கிழக்கிலிருந்து செல்லும் கடுவாயாற்றோடு சேர்த்து, காவிரியாற்றைக் குறுக்கி, மக்கள் வாழ்வுக்கும் சாகுபடிக்கும் பயன்படுத்தியிருக்க வேண்டும். இதனால் ஒரே நதியெனல்பொருந்தும் என்பர் சிலர். தஞ்சாவூர் முதல் திருவையாறு முடிய இருக்கும் வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, காவிரி என்னும் ஐந்து ஆறுகளை உடையது ஆகையால், ஐயாறு என்று பெயர்பெற்றது என்பர் சிற்சிலர். சூரியபுட்கரணி, சந்திரபுட்கரணி, கங்கை, பாலாறு, (நந்திவாய்நுரை), நந்திதீர்த்தம் என்னும் ஐந்து தெய்வீக நதிகள் தம்முள் கலப்பதால் ஐயாறு என்று பெயர் பெற்றது என்பர் சிற்சிலர். பஞ்சநதம் என்பது, ஐயாறு என்னுந் தமிழுக்கு ஒத்த வடசொல். இக்கோயில் தருமபுர ஆதீன அருளாட்சியில் விளங்குவதாகும்.

தஞ்சாவூருக்கு வடக்கே 10 கி. மீ. தூரத்தில் இருக்கிறது. தஞ்சை கும்பகோணம், திருக்காட்டுப்பள்ளி முதலிய நகர்களிலிருந்து பேருந்துகள் உள்ளன. இறைவரின் திருப்பெயர் ஐயாறப்பர்; வடமொழியில் பஞ்சநதீசுவரர்; பிரணதார்த்திஹரர் என்பர். இறைவியாரின் திருப்பெயர் அறம்வளர்த்தநாயகி; வடமொழியில் தர்ம சம்வர்த்தினி என்பர்.

தீர்த்தம் காவிரி, சூரியபுட்கரிணி என்பன.

இது சமயகுரவர்கள் நால்வராலும் பாடப்பெற்றது. "நந்தி அருள்பெற்ற நன்னகர்" என்று சேக்கிழார் இப்பதியைச் சிறப்பித்துள்ளார். சிலாதமுனிவர்க்குத் திருமகனாய் அவதரித்த திருநந்தி தேவர், சுயசாதேவியை மணந்து, ஐயாறப்பரைப் பூசித்துச் சிவசாரூபம் பெற்றமையை உட்கொண்டு சேக்கிழார் இவ்வாறு கூறலானார்.