பக்கம் எண் :

194
 

திருப்பாடல்களால் இத்தலத்தில் உணர்த்தியதுபோல் வேறு எப்பதியிலும் உணர்த்தாத அவ்வளவு பெருமையை உடையது.

இத்தலத்தில் நிகழும் விழாக்களுள் நந்திதேவர் திருமணத் திருவிழா. 'சித்திரைப்பெருந்திருவிழா' என்பவை மிகச் சிறந்தனவாகும். இவைகளுள் நந்திதேவர் திருமணத்திருவிழா, பங்குனி மாதத்தில் நிகழ்வதாகும். அதுபொழுது அம்மையப்பர் ஒரு தனி வெட்டிவேர் பல்லக்கிலும், நந்திதேவர் வேறு ஒரு வெட்டிவேர் பல்லக்கிலும் எழுந்தருளி, திருமழபாடிக்குச் செல்வர். அங்கே நந்தி தேவர்க்குத் திருமணத்தை முடித்துக்கொண்டு அன்று இரவே ஐயாற்றுக்கு எழுந்தருளும் விழா இதுவாகும்.

சித்திரைப்பெருந் திருவிழா: இது சித்திரைமாதத்தில் நிகழ்வது. இதைப் பிரமோற்சவம் என்றும் வழங்குவர். இதில் ஐந்தாம் நாள் விழா தன்னைத்தான் பூசிப்பதாகும். இவ்விழாவின் முடிவில் ஐயாறப்பர் அறம்வளர்த்தநாயகியாருடன் நன்கு அலங்கரிக்கப்பெற்ற கண்ணாடிப் பல்லக்கிலும், நந்திதேவர் தனியொரு வெட்டிவேர்ப் பல்லக்கிலும் எழுந்தருளித் திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் எனும் தலங்களுக்கு எழுந்தருள, அந்தந்த ஊர்களின் இறைவரும் தனித்தனி வெட்டிவேர்ப்பல்லக்குகளில் எதிர்கொண்டு அழைத்து உடன் தொடர மறுநாட்கலை ஐயாற்றுக்கு எழுந்தருளுவார். இதை ஏழூர் விழா அல்லது சப்தஸ்தானத் திருவிழா என்பர். தென்னாட்டில் இதைப் போன்றதொரு விழாவைக் காணமுடியாது. இவ்விழாவில் பல லட்சக்கணக்கான மக்கள் குழுமி ஏழ் ஊர்களையும் சுற்றிவரும் காட்சி போற்றத்தக்கதாகும்.

இத்திருக்கோயில் திருக்கயிலாய பரம்பரைத்தருமை ஆதீனத்து அருளாட்சியில் உள்ளது. இப்பொழுது ஆதீனத்தில் இருபத்தாறாவது பட்டத்தில் எழுந்தருளி அருளாட்சி புரியும் ஸ்ரீலஸ்ரீ மகாசந்நிதானம் அவர்கள், பழங்காலத்துச் சோழமன்னர்களுடைய ஆட்சிக்காலங்களில் நடைபெற்ற சிறப்புக்களைப் போலவே இத்திருக் கோயிலின் நித்தியநைமித்தியங்கள் எல்லாவற்றையும் மிக்க சிறப்புறச் செய்வித்தருளுகின்றார்கள்.

இத்திருக்கோயிலின் மூன்றாம் பிராகாரம் பெரியபுறத் திருச்சுற்றாலை என்று கல்வெட்டுக்களில் கூறப்பெற்றுள்ளது. இப்பிராகாரத்தின் வடபால் ஒலோகமாதேவீச்சரம் என்னும் பெயருள்ள ஒருகற்கோயில் இருக்கின்றது. அது முதலாம் இராஜராஜ