பக்கம் எண் :

195
 

சோழனுடைய மனைவியாராகிய ஒலோகமாதேவியால் கட்டப்பெற்றதாகும்.

அம்மன்கோயில் புதிய திருப்பணியை உடையது. புலவர்கள் செய்யுளை அலங்கரிப்பதுபோல், தேவகோட்டை உ. ராம. மெசுப. சேவு. மெய்யப்பச் செட்டியார் அவர்கள் அழகுறத் திருப்பணி செய்திருக்கின்றனர்.

ஆடி அமாவாசை நாள் அப்பருக்குக் காட்சிகொடுத்த நாளாகும். அன்றும் திரளான மக்கள் வந்து கூடுவர்.

ஐயடிகள் காடவர்கோன் நாயனார் ஒரு வெண்பாவால் திருவையாற்றைப் பாடியுள்ளார்கள். அது சேத்திரத் திருவெண்பாவில் சேர்க்கப்பெற்றுள்ளது. அப்பாடல் வருமாறு: -

"குந்தி நடந்து குனிந்தொருகைக் கோலூன்றி
நொந்திருமி ஏங்கி நுரைத்தேறி - வந்துந்தி
ஐயாறு வாயாறு பாயாமுன் நெஞ்சமே
ஐயாறு வாயால் அழை."

இத்தல புராணம் ஞானக்கூத்தரால் இயற்றப்பெற்றது. தருமை ஆதீனம் அச்சிட்டுள்ளனர்.

இத்திருக்கோயிலுள் அமைந்த ஐயாறப்பர்கோயில், தென்கயிலைக் கோயில், ஒலோகமாதேவீச்சரம் ஆகிய மூன்று கோயில்களில் கல்வெட்டுக்கள் இருக்கின்றன. அவைகளின் சுருக்கங்களே இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

கல்வெட்டு:

பிற்காலத்துச் சோழமன்னர்களில் முதலாம் ஆதித்தன், முதலாம் பராந்தகன், இரண்டாம் ஆதித்த கரிகாலன், முதலாம் இராஜராஜன், விக்கிரமசோழன், மூன்றாங் குலோத்துங்கன் காலத்துக் கல்வெட்டுக்களும், பிற்காலத்துப் பாண்டிய மன்னர்களுள் கோச்சடையபன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் சுந்தரபாண்டிய தேவர் காலத்துக் கல்வெட்டும், வீரமுக்கண் உடையார் மகனார் வீரசரவண உடையார் காலத்துக் கல்வெட்டும், தஞ்சாவூரையாண்ட அச்சுதப்பநாயக்கர் காலத்துக் கல்வெட்டுக்களும் இருக்கின்றன. இவைகளெல்லாம் ஐயாறுடைய அடிகளுக்குத் திருநந்தா விளக்கு