பக்கம் எண் :

201
 

பரிகலங்களையும் எவரும் மாற்றிவிடா வண்ணம் நிறையெடுத்தும், அவற்றில் மணிகள் சேர்க்கப்பெற்றிருப்பின் அவை இத்துணை என்று உரைத்திருப்பதும் மகிழ்தற்குரியதாகும்.

இக்காலத்தில் வழக்கத்தில் இல்லாத பல அணிகலன்களின் பெயர்கள் இக்கவெட்டுக்களால் தெரியவருகின்றன. அவைகள் கோளகை, தாழ்கூட்டுக்கம்பி, திருச்சன்னவடம், முத்தின்காரை, இடுக்குவளையல் முதலியன.

இக்கோயிலில் வழிபாடு நடக்குங்கால் உடுக்கை, உவச்சன் தலைப்பறை, கண்டை, திமிலை, மத்தளம், வீணை, கரடிகை முதலியவைகள் ஒலிக்கப்பெற்றுவந்தன.

1 இக்கோயிலில் ஆடல் பாடல் முதலிய பணிகளைச் செய்வதற்குப் பதியிலார் முப்பத்திருவர் இருந்தனர். அவர்கள் தலைக்கோற்பட்டம் பெற்றவர்கள். தலைக்கோல் என்பது ஆடல்பாடல்களில் சிறந்த பதியிலார்களுக்கு அரசனால் கொடுக்கப்பெற்ற பட்டமாகும்.

இக்கோயிலுக்கு ஒலோகமாதேவியார் இராஜேந்திரசிங்க வளநாட்டு, மிறைக்கூற்றத்துக் கலவாய்த்தலை என்ற ஊரில் வீரநாராயண சதுர்வேதிமங்கலத்தார்க்கு நீர்போக்கும் குஞ்சரமல்லி வாய்க்காலுக்கு வடபால் சற்றேறக்குறைய நூற்றிரண்டு வேலி நிலத்தை நிவந்தமாக விட்டிருந்தார். இவைபோன்ற பல அரிய செய்திகள் இக்கல்வெட்டுக்களால் விளங்குகின்றன.

14. திருஒற்றியூர்

ஒரு காலத்தில் தலங்கள் உள்பட எல்லா ஊர்களுக்கும் இறைவிதித்து அரசன் சுற்றோலை அனுப்பியபொழுது அவனுக்கும் ஓலை நாயகத்திற்கும் தெரியாதபடி வரி பிளந்து "இவ்வாணை ஒற்றியூர் நீங்கலாகக் கொள்க" என்று அவ்வோலையில் எழுப்பட்டிருந்ததை வியந்து அவ்வூர்க்கு ஒற்றியூர் (விலக்கு அளிக்கப்படட ஊர்) என்றும், 


1 See the Annual Reports on south Indian Epigraphy for the years 1894 No. 213 - 256, No. 135 - 157, year 1924 No. 48.

Also see the South Indian Inscriptions, Vol. V, No. 512 - 555.செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி, ஞானசம்பந்தம் ஆறாவது ஆண்டு மலர்.