பக்கம் எண் :

202
 

பெருமானுக்கு எழுத்தறியும் பெருமான் என்றும் பெயர் ஆயிற்று. "ஏட்டுவரியில் ஒற்றியூர் நீங்கல் என்ன எழுத்தறியும் நாட்ட மலரும் திருநுதலார்" என்னும் பெரியபுராணச் செய்யுளும் காண்க.

இது திருவொற்றியூர் தொடர் வண்டி நிலையத்திற்குக் கிழக்கே 1. கி. மீ. தூரத்தில் இருக்கிறது. சென்னை மாநகரின் வடபகுதியயாக விளங்குவது. பேருந்து வசதி உளது. இது தொண்டை நாட்டுத் தலங்களுள் ஒன்றாகும்.

இறைவர்: (1) படம்பக்கநாதர். உபமன்யு முனிவரிடத்துச் சிவதீட்சை பெற்றுத் தம்மை வழிபட்ட வாசுகியை இறைவர் தம் திருமேனியில் ஐக்யம் செய்து கொண்டமையால் இப்பெயர் பெற்றார். அப்பாம்பின் வடிவத்தை இறைவர் திருமேனியில் இன்றும் காணலாம்.

(2) தியாகேசர்:- அரசனுக்குக் கொடுக்கும் பொருட்டுத் தம்மிடம் நிறைந்த அன்புடைய ஏலேல சிங்கருக்கு மாணிக்கம் கொடுத்தருளினமையால் இப்பெயர் ஏற்பட்டது.

இவைகளன்றி, (3) ஆதிபுரீசுவரர், (4) புற்றிடங்கொண்டார், (5) எழுத்தறியும் பெருமான் என்னும் வேறு பெயர்களும் உண்டு. இவற்றுள் எழுத்தறியும் பெருமான் என்பதற்குக் காரணம் முன் கூறப்பட்டது.

இறைவி: வடிவுடையம்மை.

மரம்: மகிழ மரம்.

தீர்த்தம்: பிரம தீர்த்தம்.

துர்க்கையாரின் பெயர் - வட்டப் பாறையம்மை. மக்கள் இவரைச் சிறப்பாக வழிபட்டு வருகின்றனர்.

நந்திதேவர், திருமால், பிரமதேவர், வான்மீகி முனிவர், சந்திரன் முதலானோர் வழிபட்டுப் பேறு பெற்றனர்.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் இங்கு எழுந்தருளி ஞாயிறுகிழாரின் மகளாய்த் தோன்றிய சங்கிலியாரை மகிழ மரத்தடியில் சத்தியஞ் செய்து கொடுத்து மணந்த வரலாற்றை முன்னிட்டு இக்கோயிலில் ஆண்டு தோறும் மாசி மாதத்தில் மகிழடித் திருவிழா மிகச்சிறப்பாக