நடைபெற்று வருகிறது. தைலவினைத்தொழில் மரபினராகிய கலியநாயனார் அவதரித்து, கோயிலின் உள்ளும் புறம்பும் திருவிளக்கு எரித்து வரும் திருத்தொண்டை வறுமைக் காலத்தும் விடாது நடத்தி வந்தும், ஒருநாள் முட்டுப்பட அது காரணமாகத் தம் கழுத்தை அரிந்து கொள்ளத் தொடங்கிய பொழுது இறைவன் தடுத்து அருள்செய்ததும் இப்பதியாகும். "பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்துப் பிள்ளையைப்போல் ஆரும் துறக்கை அரிது அரிது" என்று தாயுமானாரால் பாடப்பெற்ற பட்டினத்துப் பிள்ளையார் பேறு பெற்றதும் இப் பதியிலேதான். இத்தலத்திற்கு ஞானசம்பந்தர் பதிகம் ஒன்று; திருநாவுக்கரசர் பதிகங்கள் ஐந்து, சுந்தரர் பதிகம் இரண்டு ஆக எட்டுப் பதிகங்கள் இருக்கின்றன. கல்வெட்டு: 1இவ்வூர்க்கோயிலில் சோழ மன்னர்களுள் மதுரை கொண்ட கோப்பரகேசரி வர்மன், உத்தமசோழதேவன், முதலாம் இராஜராஜ சோழன், முதலாம் இராஜேந்திர சோழன், முதலாம் இராஜாதிராஜ சோழன், முதற் குலோத்துங்க சோழன், முதலானோர் காலங்களிலும், கங்க பல்லவமன்னர்களில் விஜய அபராஜித போத்தரையர், கோவிஜய நிருபதுங்கவர்மர், கோவிஜயகம்பவர்மர், முதலானோர் காலங்களிலும் பாண்டியர்களில் ஜடாவர்மனாகிய திரிபுவனச் சக்கரவர்த்தி சுந்தரபாண்டிய தேவன் காலத்தும், இராஷ்டிரகூட மன்னர்களில் காஞ்சி, தஞ்சை இவைகளைக் கொண்ட கன்னர தேவர் காலத்தும், விஜயநகர வேந்தர்களில், சாயண்ண உடையார், தேவராய மகாராஜா குமாரர் புக்கண்ண உடையார், வீரப்பிரதாப தேவராய
1. See the Annual Reports on South Indian Epigraphy for the year 1892, Numbers 104-110, year 1896, Numbers 399-405. year 1911 Numbers 366-372, year 1912 Numbers 98-246, year 1938 Numbers 162-167, year 1892 Numbers 104. See also Epigraphica Indica Vol. VII, page 148, year 1892 Number 105, Vol. V page 106, year 1892 Number 110. See also South Indian Inscriptions, Vol.IV 553 year 1892 Number 106, Vol.III No. 64 year 1892 Number 107-8, Vol.IV Numbers 555-556 year 1892, Number 109, Vol.IV Number 558 year 1896 Numbers 399-405, Vol.V Numbers 1354-1360 year 1912 Number 160, Vol.III Number 108 year 1912 Number 164, Vol.III Number 105, year 1912 Number 166, Vol.III Number 143 year 1912 Number 245 Vol.III Number 145, year 1912 Number 246 Vol. III Number 115.
|