பக்கம் எண் :

206
 

இராஜேந்திரசோழன் மடம் :

ஆரிய தேசத்து மேகலாபுரத்து பிராமணி நாகலவ்வைச் சாநியான ஆரிய அம்மையாரால் கட்டப்பெற்றது. இம்மடத்திற்கு மடப்புறமாக இவ்வம்மையார் நிலம் வாங்கி விட்டிருந்தனர்.

வெளிப்பிராகாரத்தைக் கட்டியவர் :

இக்கோயிலின் வெளிப்பிராகாரத்துத் திருமதிலைக் கட்டியவர் ஆதிமங்கலத்து ஆட்கொண்ட நாயகனான சேதிராய தேவராவர். இது கட்டிமுடிந்தது மூன்றாங் குலோத்துங்க சோழ தேவர் காலத்தில் ஆகும்.

விசயநகர பரம்பரையைச் சேர்ந்த ஹரிஹரர் II - காலத்துக் கல்வெட்டு, அங்கராயன் மடம் ஒன்றைக் குறிப்பிடுகிறது.

அளவுகருவி :

கோயிலுக்கு நெய்கொண்டு வந்து அளந்தவர்கள் அருமொழித்தேவன் நாழியால் அளந்து வந்தனர். எனவே இக்கோயிலில் வழங்கி வந்த அளவு கருவி அருமொழித்தேவன் நாழி என்னும் பெயர் பெற்றிருந்தது.

இறைவர் திருப்பெயரை இட்டு வழங்கல் :

படம்பக்க நாயகர் என்னும் இறைவரது திருப்பெயரை, கோயில் நாயகம் செய்துவந்த ஒருவனுக்கு படம்பக்க நாயக பட்டன் எனவும், திரிபுவன சுந்தரத்தெரு மன்றாடிகளில் ஒருவனுக்குப் படம்பக்கன் எனவும் இட்டு அழைக்கப் பெற்றிருந்தனர். எழுத்தறிவார் என்னும் திருப்பெயரை, பையூர்க் கோட்டத்தில் உள்ள அசூரர்க்கு அருகில் இருக்கும் பவனம் பாக்கத்திற்கு எழுத்தறிவார் நல்லூர் என்று வைக்கப் பெற்றிருந்தது. விசயநகர வேந்தனாகிய வீரப்பிரதாப தேவராயர் காலத்தில் அதாவது சகம் 1346 - இல் புழல்நாட்டு மணலி என்னும் ஊரினர் ஒற்றியூருடைய நாயனார்க்கு உப்புத்தட்டு ஒன்றைக் கொடுத்திருந்தனர். அதற்குப் படம்பக்க நாயகப் பேரளம் என்னும் பெயர் வைக்கப் பெற்றிருந்தது.

அரசர்களின் சிறப்புப் பெயர்கள் :

கோப்பரகேசரி வர்மராகிய உத்தமசோழதேவர், சென்னி