அவர்கள். விநாயகரோடு குபேரனும் வழிபட்ட தலம். இறைவர் : அநேகதங்காவதேஸ்வரர். இறைவி : காமாட்சியம்மை. 1கல்வெட்டு : இத்திருக்கோயிலில் மூன்று கல்வெட்டுக்கள் இருக்கின்றன. அவைகளுள் முதற் குலோத்துங்க சோழனின் முப்பத்து நான்காம் ஆட்சியாண்டில் தோன்றிய கல்வெட்டு, திருக்கோயிலுக்கு இரண்டுவேலி நிலம் கொடுத்ததைக் குறிப்பிடுகின்றது. இந்நிலம் காஞ்சீபுரத்தில் இராஜ சிம்மேஸ்வரம் அல்லது கைலாசநாதர் கோயிலுக்கு வடக்கில் உள்ளது. இம் மன்னனுடைய இருபதாம் ஆண்டுக் கல்வெட்டு, தாமர்க்கோட்டத்து தாமர்நாட்டுத் தாமர் (தாமல்) அல்லது நித்தவிநோதநல்லூரில், அரசன் மூன்றுவேலி நிலத்தை இறைவர்க்குக் கொடுத்ததைக் குறிப்பிடுகின்றது. மூன்றாவது கல்வெட்டு நள ஆண்டில் ஏற்பட்டது. அநேகதங்காபதக்கோயில் அதிகாரிகள், கோயிலுக்குரிய கைக் கோளர்களுக்கு 1400 குழி நிலத்தைக் கொடுத்ததைக் குறிப்பதாகும். 17. திருக்கச்சிஏகம்பம் (காஞ்சிபுரம்) மாமரத்தைத் தலமரமாகக் கொண்டுள்ளமையால் இப்பெயர் பெற்றது. ஆம்ரம் என்பது வடசொல், அது தமிழில் வழங்கும்போது, தமிழ் இலக்கணத்திற்கு ஒத்தவாறு மகரத்துக்கு இனமாகிய பகரத்தைப்பெற்று ஆம்பரம் என்று ஆயிற்று. மகரத்தின் பின் ரகரம் தமிழில் மயங்காது. ஆம்ரம் என்பது ஏகமென்னும் சொல்லொடு புணர்ந்து ஏகாம்பரம் என்று (வடமொழி விதிப் படி) ஆயிற்று. ஏகாம்பரம் என்பது ஏகம்பம் என்றும், கம்பம் என்றும் மருவிற்று. கள்ளக்கம்பனை, நல்லகம்பனை என்பவைகளில் காண்க. காஞ்சிபுரம் தொடர்வண்டி நிலையத்திற்கு மேற்கே சுமார்
1. See the Annual Reports on South Indian Epigraphy for the year 1890. Nos. 22-24.
|