திருவுளக்குறிப்பின் வழியே பரவையாரும் "அவரவர் வீட்டின் முன் உள்ள நெல்லை அவரவரும் எடுத்துக்கொள்க" என்று பறைசாற்றி அறிவித்தார். "நீளநினைந்து" என்ற சொல் ஆட்சி ஆழமுடையது. நீள நினைந்து என்பது எப்பொழுதும் இடையறவு படாமல் தொடர்ந்த நினைவையே குறிக்கும். "சிந்தை இடையறா அன்பே" என்னும் சேக்கிழார் வாக்கையும், "இடையறாப் பேரன்பும்" என்னும் சிவஞான முனிவர் வாக்கையும் நினைவு கூர்க. மேலும் இப்பதிகத்தை நாள்தோறும் பக்தி சிரத்தையுடன் ஓதினால் உணவிற்குப் பஞ்சமில்லை. ஆட்களுக்கும் பஞ்சமில்லை. நமக்கு நல்ல ஏவலர் இருந்து கொண்டே இருப்பர். இது பல பக்தர்கள் அனுபவம். அப்பாடல் காண்போம். நீளநினைந்தடியேன் உனைநித்தலும் கைதொழுவேன் வாளன கண்மடவாள் அவள் வாடி வருந்தாமே கோளிலி எம்பெருமான் குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன் ஆளிலை எம்பெருமான் அவை அட்டித்தரப் பணியே. (தி. 7 ப. 20 பா. 1) முன்னவன் : எல்லோருக்கும் முன்னவனும், தனக்கு முன் ஒரு பொருள் இல்லாதவனும் யாவரினும் தலையாயவனுமாய் உள்ளவன் சிவபெருமான். பெருமானின் இப்பரத்துவத்தைத் திருப்பழ மண்ணிப்படிக்கரைத் திருப்பதிகம் முதற் பாடலில் குறிக்கிறார். இக்கருத்தையே திருநாவுக்கரசரும் சிவனே முன்னவன், அவன் வகுத்த நெறியே முன்னெறி என்று, "சொற்றுணை வேதியன்" என்னும் பதிகத்துள் ஒன்பதாம் பாடலில் குறித்துள்ளார். "முன்னெறியாகிய முதல்வர் முக்கணன்" என்பது அப்பாடற்பகுதி. (தி. 4 ப. 11 பா. 4) இம்முன்னெறியே சிவநெறி என்பது உணர்வோமாக. எங்கேனும் இருந்து நினைந்தால் : "எங்கேனும் யாதாகிப் பிறந்திடினும் தன் அடியார்க்கு, இங்கே என்றருள்புரியும் எம்பெருமான்" (தி. 2 ப. 40 பா. 6) என்பது ஞானசம்பந்தர் வாக்கு. இதே கருத்தை வேறொரு வகையில் "எங்கேனும் இருந்து உன் அடியேன் உனை நினைந்தால், அங்கே வந்து என்னோடு உடனாகி நின்றருளி என்வினையை அறுத்திட்டு எனை ஆள்பவன் கழிப்பாலை மேவிய கங்காநாயகன்" (தி. 7 ப. 23 பா. 2) என்கிறார். ஆரூரர். மேலும் அப்பர் அருளிய "ஓதுவித்தாய்முன் அறவுரைகாட்டி அமணரோடே காதுவித்தாய்
|