காமாட்சியம்மன் ஆலயங்களுக்குப் பாண்டிநாட்டு ஊர்கள் இரண்டு கொடுத்தான் எனத் தெரிவிக்கிறது. காகதீயகணபதி (கி. பி. 1250) காலத்தில் அவர் மந்திரி சாமந்தபோஜன் ஓர் ஊரைத் தானம் செய்தான். மற்றும் விஜயகண்ட கோபாலனது கல்வெட்டு ஒன்றில் அவன் அரசுபெற்றது கி. பி. 1250 எனத் தெரிகிறது. 5. ராயர்மண்டபத்தில் கம்பண உடையார் ஆனந்த ஆண்டுக் கல்வெட்டு இருக்கிறது. 6. காமாட்சி அம்மன் கோயில் அச்சுதராயன் (கி. பி. 1534) படையெடுத்து வெற்றியடைந்து கோயிலுக்கு எட்டு ஊர்கள் கொடுத்த செய்தி கண்டிருக்குகிறது. 7. கோபுரம்:- விஜயநகரமல்லிகார்ச்சுனனுடைய (கி. பி.) 1456) கல்வெட்டு இருக்கிறது. ஏகாம்பரநாதருக்கும், நாச்சியார் காமாட்சிக்கும் தேவை காவலன், திருவணைகாவலன், வேதியர்காவலன், வீரகஞ்சுகன், புவனேகவீரன், சமரகோலாகலன் சகாப்தம் 1391 இல் தன்பெயரால் புவனேகவீரன் சந்தியாக ஒருசந்தி பூசைக்கும், மாதம் பிறந்த நட்சத்திரத்திற்கும் விசேட பூசை நடக்கும்படிக்கு அமுதுபடி, கறியமுது, இலையமுது, அடைக்காயமுது, திருப்பரிவட்டம், சாத்துப்படி திருவிளக்கு உட்பட வேண்டும் நிவந்தங்களுக்குப் பாண்டி மண்டலத்து வீரநாரயண வளநாட்டுப் புவனேக வீரநல்லூரையும் சமரகோலாகல நல்லூரையும் விட்டுள்ளான். சகயாண்டு 1187 இல் திருஏகம்பமுடையார் திருமுன்பு திருநொந்தாவிளக்கு ஒன்றைச் சந்திர சூரியர் உள்ளவரை எரிப்பதற்குப் புலியூர்க்கோட்டத்து வல்லங்கிழான் பள்ளி கொண்டான் கோயிற் பிள்ளை வைத்துள்ளான். சகயாண்டு 1172 இல் காஞ்சிபுரத்து உடையார் திருஏகம்பமுடைய நாயனார்க்கு ஜயங்கொண்ட சோழ மண்டலத்துத் தாமர்க்கோட்டத்துக் களத்தூரைத் திருவிடையாட்டம் நீக்கி, ஊர் அடங்கலும் கணபதிதேவன் சந்திக்குத் திருவமுதுபடி கறியமுது உள்ளிட்ட வியஞ்சனங்களுக்கும் சாத்தியருளத் திருப்பரி வட்டங்களுக்கும் திமேற்பூச்சு கற்பூரம் பனிநீர் உள்ளிட்டவற்றிற்கும் இச்சந்தி பூசிக்கும் நம்பிமார்க்கும், திருப்பரிசாரகர்க்கும், திருமஞ்சனம் எடுப்பார்க்கும், திருப்பள்ளித்தாமம் தொடுப்பார்க்கும் மற்றும் இச்சந்திக்கு வேண்டும் நிவந்தங்களுக்குக் கொடுக்கப்பட்ட செய்தியை ஒரு கல்வெட்டு அறிவிக்கின்றது. இராஜராஜதேவர்க்குயாண்டு இரண்டா
|