பக்கம் எண் :

213
 

வதில் சளுக்கியநாராயணன் மனுமசித்தரசன் திருஏகம்பமுடையார்க்குத் தேவதானமாக மாற்பட மடுவில் பொன்மேந்தகம்பன் வளாகம் என்னும் பெயருள்ள ஆயிரம் குழி நிலத்தை விட்டுள்ளான். இராஜராஜதேவர்க்குயாண்டு பதினைந்தில் ஏகம்பமுடையார்க்குத் திருநுந்தாவிளக்குக்குப் பால்பசு பத்து, சினைப்பசுப் பன்னிரண்டு, வறள்பசு ஆறு, கிடாரி நான்கு, ரிஷபம் ஒன்று ஆக உருக்கள் முப்பத்து மூன்று விடப்பட்டுள்ளன. மூன்றாங்குலோத்துங்க சோழனின் இருபத்தேழாம் ஆட்சியாண்டில் சயங்கொண்ட சோழ மண்டலத்து ஸ்ரீமத் குவளாலபுர பரமேஸ்வரன், கங்ககுலோற்பவன், சீயகங்கன் அமரா பரணனான திருஏகம்பமுடையான் ஏகம்ப முடையார்க்கு நொந்தா விளக்கு ஒன்றினுக்கு முப்பத்திரண்டு பசுவைக் கொடுத்துள்ளான்.1

கச்சி ஏகாம்பரநாதர் கோயிலின் கீழக்கோபுரத்திற்கு அருகில் ஆலாலசுந்தரன் மடம் ஒன்று இருந்தது. புதுக்கோடு மருந்தவள்ளலின் சிஷ்யனாகிய திருநாவலூர், கூடலுடையான் தழுவக்குழைந்தான் நிலம் அளித்திருந்தான். அம்மடத்தைப்பற்றி, சகம் 1403-இல் குறிப்பிடப் பெற்றுள்ளது. இதுவன்றி ஈசானதேவர் மடம் ஒன்றும் இருந்தது.

பதினாறு கால் சித்திரமண்டபத்திற்கு எதிரில் உள்ள தாண்டவதேவர் கோயிலும், திரயம்பகேஸ்வரர் கோயிலும் அரசனது மகளாகிய திரயம்பக்க தேவியால் கட்டப்பெற்றதாகும். சகம் 1378 இல் ஏற்பட்ட மல்லிகார்ச்சுன தேவ மகாராயர் கல்வெட்டு, புதுப்பாக்கம், வேளையூர் இவை இரண்டு ஊர்களும் திருவேகம்பமுடைய நாயனார்க்கும், காமாட்சி தேவியார்க்கும் முறையே கொடுக்கப்பட்டன என்பதைக் குறிக்கின்றது.

18. கச்சித்திருமேற்றளி

இது செங்கற்பட்டு மாவட்டம் காஞ்சிபுரத்தின் மேற்குப் பகுதியாகிய பிள்ளையார் பாளையத்தில் இருக்கின்றது. திருஞானசம்பந்தர் வாழ்ந்திருக்கவும் பாடவும் பெற்றதால் இது பிள்ளையார் பாளையம் எனப் பெயர் பெற்றது.

தலச் சிறப்பு :

இங்கே இரண்டு திருக்கோயில்கள் இருக்கின்றன. ஒன்று ஓத


1. See the South Indian Inscriptions, Volume IV.