உருகீசுவரர்கோயில், இங்கே எழுந்தருளி யிருந்தவர் திருமால். திருஞான சம்பந்தப் பெருமானாரின் திருப்பாடலைக் கேட்டுச் சிவலிங்கமாய் உருகினார். காஞ்சிபுராணத்தில் இதற்கு ஆதாரம் உண்டு. மற்றொன்று திருமேற்றளி நாதர்கோயில். இவ்விரு திருக்கோயில்களுக்கும் கிழக்கே திருவீதியில் சம்பந்தர்கோயில் இருக்கின்றது. இத் தலத்திற்கு அப்பர் சுவாமிகள் பாடியருளிய திருநேரிசைப் பதிகம் ஒன்று இருக்கின்றது. காஞ்சி மாநகரம் சிறந்த திருத்தலமாகத் திகழ்வதுடன் எண்ணற்ற சிவதலங்கள் பலவற்றைத் தன்னகத்தே கொண்டதாக இலங்குகின்றது. இவற்றுள் கச்சியேகம்பம், கச்சிமேற்றளி, திருவோணகாந்தன்தளி, திரு அனேகதங்காவதம், திருக்கச்சி நெறிக் காரைக்காடு என்ற ஐந்து சிவதலங்கள் தேவாரத் திருப்பாடல்கள் பெற்ற திருத்தலங்களாகத் திகழ்கின்றன. இவ்வைந்து திருத்தலங்களுள் ஒன்றாக விளங்குகிறது திருக்கச்சிமேற்றளி. இது திருக்கச்சி யேகம்பத்திற்குத் தென்மேற்கே ஒரு கல் தொலைவில் அமைந்துள்ள அணி நகரமாகும். இந்நகரை ஸ்ரீ காஞ்சிமேற்றளியென்றும் திருமேற்றளி யென்றும் வழங்குவர். திருக்கச்சியின் மேற்றிசையில் அமைந்திருத்தலால் இத்தலம் இப்பெயர் பெற்ற தெனலாம். இத்தலத்திற்குச் சம்பந்தர்பதிகம் ஒன்றும் அப்பர்பெருமான் பதிகம் ஒன்றும் ஆக இரண்டு பதிகங்கள் உள. இறைவர் : திருமேற்றளிநாதர்; இறைவி : திருமேற்றளிநாயகி. தீர்த்தம் : விஷ்ணு தீர்த்தம். காஞ்சி - திருமேற்றளி : 1இத்திருக்கோயிலில், சம்புவராய மன்னர்களில், சகலபுவனச்
குறிப்பு: திருமேற்றளி நிலைபெற்றுள்ள ஊராகிய பிள்ளையார் பாளையத்தின் தெருக்களில் உள்ள துண்டுக் கல்வெட்டுக்கள் திரு வேகம்பன்தெரு என்று காஞ்சிபுரத்தில் ஒரு தெருவிற்குப் பெயர் வைக்கப்பட்டிருந்ததையும் சந்திரகிரியில் அப்பராச உடையார் என்னும் கவிஞர் ஒருவர் இருந்ததையும், ஏகாம்பரநாதர் கோயிலுக்குப் பழுது பார்ப்பதற்கு இரண்டு ஊர்களின் வரிகளைக் கொடுத்ததையும் உணர்த்துகின்றன. 1. See the Annual Reports on South Indian Epigraphy for the year 1921 Numbers 86-91; year 1923 Numbers 101-104. (with the name of the village Pillayarpalayam)
|