பக்கம் எண் :

216
 

வருந்தினார்.

பரமசிவன் பிராமண வடிவங் கொண்டு எழுந்தருளி அந்தணர்கள் வீடு தோறும் சென்று, சோறு இரந்து வந்து இட்டுப் பசியாற்றி மறைந்தருளினார். அதுபொழுது சுந்தரமூர்த்தி நாயனார் மனங்குழைந்து பாடியருளிய தலம். திருக்கோயிலுக்கு மேற்கே மலையடியில் அமுதம் (மருந்து) அளித்த மருந்தீசர் எழுந்தருளியிருக்கின்றார்.

மலைமேல் சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு இரந்து இட்ட ஈசர் வீற்றிருக்கின்றார்.

இறைவர்:- விருந்திட்டநாதர்.

இறைவி:- உமையம்மை.

தியாகராஜர்:- அமுதத்தியாகர்.

தீர்த்தம்:- கூர்ம தீர்த்தம்.

1கல்வெட்டு :

இக்கோயிலில், சோழமன்னர்களில் முதற்குலோத்துங்க சோழன், திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜாதி ராஜதேவன், திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜதேவர், மூன்றாங் குலோத்துங்க சோழன் இவர்கள் காலங்களிலும் பாண்டிய மன்னர்களில் ஜடாவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி சுந்தர பாண்டியன், மாற வர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி சுந்தரபாண்டியன் மாறவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி வீரபாண்டியன், இவர்கள் காலங் களிலும்; விஜயநகரவேந்தரில் அரியண்ண உடையார் மகன் விருப் பண்ண உடையார் காலத்திலும்; சாளுவ மன்னரில் நரசிங்கராயர் காலத்திலும் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இக்கோயிலில் உள்ள கல்வெட்டுக்களில் மூன்றாங்குலோத்துங்க சோழன் கல்வெட்டுக்கள்தான் மிகுதியாக உள்ளன.

இக் கல்வெட்டுக்களில் இறைவர் திருஆலக்கோயில் உடையார் என்னும் பெயரால் குறிக்கப்பட்டுள்ளார். இவ்வூர் ஜெயங் கொண்ட சோழமண்டலத்துக் களத்தூர்க் கோட்டத்து, செங்குன்ற நாட்டுத்


1. See the Annual Reports on South Indian Epigraphy for the year 1909 - 261-319.