இந்திரன் இறுமாப்புடன் கயிலைக்குச் சென்றான். அப்பொழுது இறைவர் பூதவடிவாய் அவன்முன் தோன்றினார். அவன் அதை அறிந்து கொள்ளாது வச்சிராயுதத்தை அவர்மேல் எறிந்தான். அதன்பின் இறைவர் என்று அறிந்து தன்பிழையைப் பொறுத்தருளுமாறு வேண்டினான். அதைப்பொறுத்த காரணம்பற்றி இப்பெயர்பெற்றார். இறைவியாரது திருப்பெயர் கோல்வளைநாயகி. தீர்த்தம் இந்திரதீர்த்தம். இக்கோயில் தருமபுர ஆதீன அருளாட்சியில் உள்ளது. இவ்வூர் அந்தணர்களை இவ்வூர்த் தேவாரத்தில், "பொய்யாத வாய்மையாற் பொடிப்பூசிப் | போற்றிசைத்துப் பூசைசெய்து | கையினா லெரியோம்பி மறைவளர்க்கு | மந்தணர்தங் கருப்பறியலூர்" |
எனச் சிறப்பித்துக் கூறியுள்ளது. அம்பலவாணர் இயற்றிய புராணம் அச்சில் வெளிவந்துள்ளது. கல்வெட்டு : இத்தலத்தின் கோயில் சீகாழி மலைக் கோயிலைப் போல் அமைந்திருக்கின்றது. மலைக்கோயிலில் அம்மையப்பர் திருவுருவம் சட்டைநாதர் திருவுருவமும் உள்ளன. தருமை ஆதீனம் இருபத்தைந்தாவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அவர்களால் ஜீரணோத்தாரணம் செய்யவும், சுதைவிக்ரகங்கள் புதுப்பிக்கவும் பெற்றுக் கும்பாபிஷேகம் செய்யப்பெற்றது. இதனை மேலைக்காழி எனவும் வழங்குவர். இத்திருக்கோயிலில் மூன்றாங்குலோத்துங்க சோழதேவரின் 13ஆம் ஆண்டு 280 ஆம் நாள், 14 ஆம் ஆண்டு 35 ஆம் நாள்களிலும், கோனேரின்மை கொண்டானின் 7 ஆம் ஆண்டு 73ஆம் நாள், 10ஆம் ஆண்டு 334ஆம் நாட்களிலும் திருபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜ தேவரின் மூன்று, இருபது ஆண்டுகளிலும் பொறிக்கப்பெற்ற கல்வெட்டுக்களும் விஜயநகர அரசர்களில் பிரதாபகிருஷ்ண தேவராயரின் சகம் 1489 இல் பொறிக்கப்பெற்ற கல்வெட்டும், அரசன்
|