வனப்புக்கள் எழில்பெற எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. இந்த இயற்கை வனப்புக்களை, திரு.ந.மு. வேங்கடசாமி நாட்டார் அடிக்கடி எடுத்துப் பாராட்டிப் பேசுவதுண்டு. 24. திருக்கழிப்பாலை சிவபுரி என வழங்கப்பெறுகிறது. இது முன்பு கொள்ளிடப் பேராற்றின் வடகரையில் காரைமேடு என்னும் இடத்தில் இருந்தது. அங்கு இருந்த பொழுது கொள்ளிடத்தின் வெள்ளப்பெருக்கு, திருக்கோயிலை முற்றிலும் பாழ்படுத்திவிட்டது. படுகைமுதலியார் குடும்பத்தில் திரு. பழநியப்ப முதலியார் என்பவர் சிவபுரிக்குத் தெற்கில் கோயில்கட்டி அதில் கழிப்பாலை இறைவரையும், இறைவியாரையும், ஏனைய பரிவார தேவதைகளையும் எழுந்தருளுவித்துள்ளார். இது சிதம்பரத்திற்குத் தென்கிழக்கே சுமார் 10 கி. மீ. தூரத்தில் இருக்கிறது. இது சோழநாட்டு வடகரைத் தலங்களுள் நான்காவது. சிதம்பரத்திலிருந்து பேருந்துகள் உள்ளன. வான்மீகி முனிவர் பூசித்துப் பேறு எய்தினர். இத்தலத்திற்கு ஞானசம்பந்தரது பதிகங்கள் இரண்டு, திருநாவுக்கரசரது பதிகங்கள் ஐந்து, சுந்தரரது பதிகம் ஒன்று ஆக எட்டுத் திருப்பதிகங்கள் இருக்கின்றன. இவற்றுள் திருநாவுக்கரசர் திருவாய் மலர்ந்துள்ள "வனபவள வாய்திறந்து" என்று தொடங்கும் அகப்பொருள்துறைகள் அமைந்த பாடல்கள் படித்து இன்புறத்தக்கன. சுவாமியின்பெயர் பால்வண்ணநாதர். தேவியின் பெயர் வேதநாயகி. கல்வெட்டு : 1இக்கோயிலில் நான்குசோழ மன்னர்களின் கல்வெட்டுக்கள் படி எடுக்கப் பட்டுள்ளன. முதலாம் இராஜராஜன் ஒரு நுந்தா விளக்கு எரிக்க, திருக்கழிப்பாலை மகாதேவனுக்குப் பத்துக் காசுகள் தானம்
1இதுகாறும் ஆண்டு அறிக்கை, கல்வெட்டுத் தொகுதி இவைகளில் இக்கோயில் கல்வெட்டுக்கள் வெளிவந்தில. நேரில் படித்து எழுதியுதவின.
|