| கடையெலாம் பிணைத்தேரைவால் | கவ லாதெழு மட நெஞ்சமே | | புறம் பயம் தொழப் போதுமே" |
என்கிறார். நிலையாமைக்குத் தேரைவாலை உவமை காட்டியுள்ளமை அரிய பிரயோகம். முன்னைச் செய்வினை இம்மை வரும் : முற்பிறப்பில் செய்த வினை இம்மையில் வந்து நம்மைச் சூழும். ஆதலின் "மனமே என்னைக் கலங்கச் செய்யாதே. புறம்பயம் தொழ எழுவாயாக" என்று அருள்கின்றார். | "முன்னைச் செய்வினை இம்மையில் வந்து | மூடுமாதலின் முன்னமே | | என்னை நீ தியக்காதெழு மட நெஞ்சமே" | (தி. 7ப. 35 பா. 7) |
மேலும் "மலமெலாம் அறும் இம்மையே, மறுமைக்கும் வல்வினை சார்கிலா ஆதலால் சலமெலாம் ஒழி நெஞ்சமே" என்கிறார். மலம் அழுக்கு - மும்மலம், சலம் - துன்பம் (தி. 7 ப. 35 பா. 8) கானாட்டு முள்ளூர் : திருவாழ்கொளிபுத்தூரைத் தரிசித்துக் கொள்ளிடத்தின் வடகரையில் உள்ள கானாட்டு முள்ளூரை அடைந்தபோது பெருமான் காட்சி கொடுத்தார். சுந்தரர் அதனைக் "கண்டு தொழுதேன்" (தி. 7 ப. 40) என்று பாடுகிறார். முள்ளூர் என்பதே ஊரின் பெயர். கானாடு என்பது சோலை சூழ்ந்த நாடு என்பதையே குறிக்கும். கா-கான்-சோலை. அக்காலத்து கானாடு மேற்கானாடு, கீழ்க்கானாடு என பிரிக்கப்பட்டிருந்தது. மேற்கானாடு என்பது தெற்கே கொள்ளிடக்கரை முதல் வடக்கே கெடில நதி வரை என்று வரலாறு அறிவுறுத்துகின்றது. "வள்வாய மதிமிளிரும்" என்னும் பதிகத்தின் ஒவ்வொரு பாடல் இறுதியிலும் "கானாட்டு முள்ளூரில் கண்டு தொழுதேனே" என்று பாடியுள்ளார். என் தலைமேல் பயில்வார் : திருக்கழுக்குன்றத்து இறைவனைப் பணிந்த சுந்தரர் கச்சூர் ஆலக்கோயில் சேர்ந்தார். உச்சிவேளை, நல்லபசி. அவ்வூர்ப் பெருமான் பிச்சை எடுத்து வந்து சுந்தரர்க்கு அமுது அருத்தினார். இக்கருத்தை இவ்வூர் "முதுவாய் ஓரி கதற" என்னும் (தி. 7 ப. 41)
|