பக்கம் எண் :

29
 

உழாதவர்கள் அவர்கட்கும் பயன்படாத விடை என்பதையும் உணர்த்தியுள்ளார்.

ஆர்ந்தனன் ஆர்ந்தனன் :

திருவொற்றியூரில் சங்கிலியாரைப் பிரிந்து காஞ்சியில் இடக்கண் பெற்று, திருவாரூர் செல்லும் வழியில் திருஆமாத்தூர் அழகரைத் தொழுது "காண்டனன்" எனத் தொடங்கும் பதிகம் (தி. 7 ப. 45) பாடினார். பதிகம் முழுவதும் ஒரே செயலை வலியுறுத்தற் பொருட்டு இருமுறை சொல்லிப் போகிறார். நாலாம் பாடலில் தாம் சங்கிலியாருடன் வாழ்ந்த வரலாற்றைச் சுருக்கமாகவும் விளக்கமாகவும் சொல்கிறார். உள்ளத்துள்ளே என்றும் நிலைத்து நின்று ஒளிவிடும் பொருளை ஆய்ந்து ஆய்ந்து முடிவாகக் கண்டனன். அப்பொருளைச் சிறப்பாகத் திருவொற்றியூர் சென்று சார்ந்தனன். அப்பெருமான், அருளால் சங்கிலி மென்தோள் தடமுலை இன்பத்தை ஆர்ந்தனன். அனுபவித்தேன். அனுபவித்த இது சிற்றின்பமே. ஆனால் அதுவே பேரின்பமாய்ப் பிறங்கிற்று. ஆமாத்தூர் ஐயன் அருளாய்ப் பெருகிற்று எனச் சிற்றின்பத்தையே பேரின்பமாய் அனுபவித்த அவர் தம் அருள் நிலையை அகச்சான்றாக அருளியுள்ளார். (தி. 7 ப. 45 பா. 4)

இந்நிலையை வெறெங்கும் அருளிற்றலர். இந்நிலையை வைத்தும் அசபாயோக நெறியை விளக்க அசபா நடனம் ஆடிய திருவாரூர்த் தியாகேசர் சுந்தரருக்குத் தம்மைத் தோழமையாகக் கொடுத்ததைக் கொண்டும் திருவாரூர் யோகநெறிக்கு மூலமான மூலாதாரத்தலமாய் விளங்குவதைக் கொண்டும், பரியங்க யோகம் என்பது கட்டிலில் மனைவியுடன் சேர்ந்து விந்து நாசம் இன்றிப் பயிலும் யோகம் என்பதைக் கொண்டும் சுந்தரருக்கு இருமனைவியரிடத்தும் குழந்தைப்பேறு இன்மையைக்கொண்டும் சுந்தரர் இருவரிடத்தும் ஆழ்ந்து அனுபவித்தது யோகமுறையில் ஐயன் அருளையே என்பதனைத் தெளியலாம். இதை உணர்த்தும் பாடலே ஆசியுரையின் தலைப்பில் இடம் பெற்றுள்ளது காண்க.

பிறவாத தன்மை வந்து எய்தினேன் :

சோழநாட்டின் மேல் எல்லையில் உள்ளதும், காவிரியின் வடகரையில் உள்ளதுமான ஈங்கோய் மலையைத் தொழுது கொங்கு நாட்டின் காவிரித்தென் கரையில் உள்ள திருப்பாண்டிக்கொடுமுடி சேர்ந்தார். "மற்றொரு பற்றுமின்றி உன் திரு வடியையே மனத்தில் பாவித்தேன். அதனால் பிறந்ததனால் ஆய பயனைப் பெற்றவனாயினேன். பிறவாத தன்மை வந்தெய்தப் பெற்றேன். இனி