பக்கம் எண் :

31
 

இப்பதிகம் (தி. 7 ப. 49) தோழர் என்ற முறையில் இருபொருள் படுமாறு பாடியுள்ளமை காணலாம். உமையம்மை, விடையூர்தி முதலியன இருந்தும் எமக்கு உதவவில்லையே என்ற பொருள்தான் முதலில் தோன்றும். ஊன்றிப்பார்த்தால் "இக் கொடியவர்கள் வாழும் இக்காட்டுப் பகுதியில் பெருமானே இங்கு ஏன் தங்கியுள்ளீர்? வேறு நல்ல இடத்திற்குப் போகலாகாதா" என்று வேண்டுவதை உணரலாம். இதுவே உண்மைப் பொருள்.

"இடுகு நுண்ணிடை மங்கை தன்னொடும்
எத்துக்கு இங்கிருந்தீர் எம்பிரானீரே"

"எல்லைக்காப்பதொன்று இல்லையாகில்
நீர்எத்துக்கு இங்கிருந்தீர்".

(தி. 7ப. 49 பா. 1, 2)

காவல் இல்லாத இடத்தில் ஏன் நீர் தங்கியிருக்க வேண்டும்?

"ஏறுகால் இற்றதில்லை யாய்விடில்
எத்துக்கிங்கிருந்தீர்"

(தி. 7 ப. 49 பா. 4)

இளஏறு கால் முடமாகாமல் நன்றாய் இருக்கும்போது அதிலேறி நல்ல இடத்தில் போய் இருக்கக் கூடாதா? என்று வினவுகிறார்.

எத்தனை நாள் பிரிந்திருக்கேன்:

திருவொற்றியூரில் சங்கிலியாருடன் மகிழ்ந்திருக்கும் நாள்களில் திருவாரூர் வசந்த விழா நினைவுக்கு வர "எத்தனை நாள் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே" என்று பாடித் திருவொற்றியூரினின்றும் பிரிந்தார். சபதம் தவறியதால் கண் மறைந்தது. அத்துடனே புறப்பட்டார். அப்போது பாடப்பட்டதே "பத்திமையும் அடிமையையும்" என்னும் பதிகம் (தி. 7 ப. 51). இதில் பத்தாம் பாடலில் "மாழை ஒண்கண் பரவையைத் தந்து ஆண்டானை மதியில்லா ஏழையேன் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே" என்று பாடுகிறார். பதினொன்றாம் பாடலில் "சங்கிலியோடு என்னைப் புணர்த்த தத்துவனைச் சழக்கனேன் எங்குலக்கப் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே" என்றும் பாடி இருவரும் இறையருளால் இணைக்கப் பெற்றவர்கள் என்பதைத் தாமும் உணர்ந்து நமக்கும் உணர்த்துகிறார்.

அடியார்க்கு அடியேன் ஆவேனே:

அடியார்கட்கு அடியேன் என்று திருவாருரில் திருத்தொண்டத்தொகை பாடிய சுந்தரர் திருவொற்றியூரை நீங்கியதால் இரு கண்களும் மறைந்தன. அத்துடனேயே