அறிகின்றிலம். அத்துர்க்கையாரைச் செய்வித்தவன் திருவழுந்தூர் நாட்டு நெற்குப்பை உடையான் ஆலன் பலதேவனான பாத்திரசேகர பல்லவரையன் ஆவன். அர்த்த மண்டபத்து வாசலடியில் உள்ள மகாகாளனைச் செய்பித்தவன் தென்கரை நாட்டு ஆனியமுடையான் காரிவேப்பனாகிய மூவேந்த வேளான் ஆவன். திருவேள்விக்குடியைத் தன்னகத்துக்கொண்டுள்ள நாடு : கோப்பரசேகரி வர்மன் காலத்தில் இவ்வூர் வடகரை குறுக்கை நாட்டுக்கு உட்பட்டிருந்தது. வடகரை என்பது காவிரிக்கு வடகரையாகும். குறுக்கை என்பது தேவாரம் பெற்ற தலமாகிய திருக்குறுக்கையாகும். இது திருவேள்விக்குடிக்கு வடகிழக்கே சுமார் 8 கி. மீ. தூரத்தில் இருக்கின்றது. குறுக்கை நாட்டுக் குறுக்கை என்ற நாட்டுத் தொகையில் சுந்தரமூர்த்தி சுவாமிகளால் குறிப்பிடப்பெற்றது. இவ்வூரேயாகும். முதலாம் இராஜராஜன் காலத்தில் இவ்வேள்விக்குடி இராஜேந்திர சிங்க வளநாட்டுக் குறுக்கை நாட்டிற்கு உட்பட்டிருந்தது. இராஜேந்திர சிங்க வளநாடு என்பது காவிரிக்கும், சிதம்பரத்திற்கு வடக்கே இருக்கும் வெள்ளாற்றிற்றும் இடைப்பட்ட நிலப்பரப்பாகும். இது இருபத்திரண்டு பிரிவுகளைக் கொண்டடிருந்தது. விஜய ராஜேந்திரன் (கங்கைகொண்ட சோழனின் இரண்டாவது மகன்) கல்வெட்டில் இந்த இராஜேந்திரசிங்க வளநாடு இராஜாயிராஜ வளநாடு என்று வழங்கப் பெற்றிருந்தது. இந்த இராஜேந்திர சிங்க வளநாடு முதற்குலோத்துங்க சோழன் காலத்தில் விருதராச பயங்கர வளநாடு என்று பெயர் பெற்றது. பிற்பட்ட காலங்களிலும் இப்பெயரே நின்று நிலவுவதாயிற்று. திருவேள்விக்குடியைத் தன்னகத்துக் கொண்டுள்ள சதுர்வேதிமங்கலம் : சதுர்வேதிமங்கலம் என்பது சிலசிற்றூர்களைத் தன்னகத்துக் கொண்டதாகும். அம்முறையில் இத்திருவேள்விக்குடி கோப்பரகேசரிவர்மன் காலத்தில் விடேல்விடுகு சதுர்வேதி மங்கலத்தைச் சேர்ந்திருந்தது. கங்கைகொண்ட சோழன் காலத்தில் இது கடலங்குடி என்று பெயர் பெற்றது. விஜயராசேந்திரன் காலத்தில்
|