பாண்டூர் : இது திருக்குறுக்கைக்குத் தென்பால் உள்ள ஊராகும். இக்கோயில் கல்வெட்டில் குறிக்கப்பெற்ற வேறு நாடுகள் : நல்லாற்றூர் நாடு : இது திருவேள்விக்குடிக்கு மேற்கே நல்லாற்றூர் என்பதைத் தலைநகராகக் கொண்ட நாடாகும். குணமலப்பாடி, ஆலங்குடி, முதலான ஊர்கள் இந்த நல்லாற்றூர் நாட்டைச் சேர்ந்தன. திருக்கோடி காவிற்குக் கிழக்கே நல்லாத்தடி என்று ஒரு ஊர் இருக்கின்றது. இதுவே நல்லாற்றூர் ஆதல் வேண்டும். இந்த நல்லாற்றூர் நாட்டில் கோப்பரகேசரி வர்மன் காலத்தில் இருந்த சதுர்வேதிமங்கலத்திற்கு விடேல் விடுகு என்று பெயர் வைக்கப் பெற்றிருந்தது. அச்சதுர்வேதி மங்கலம் விக்கிரமசோழன் காலத்தில் பூலோக மாணிக்கச் சதுர்வேதிமங்கலம் என்னும் பெயர் எய்திற்று. உய்யக்கொண்டார் வளநாட்டுப் பேராவூர் நாடு : - உய்யக் கொண்டார் வளநாடு என்பது காவிரிக்கும் அரிசிலுக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பாகும். இதன் பிரிவுகளுள் ஒன்றே பேராவூர் நாடு. இது திருவேள்விக்குடிக்குத் தெற்கே சுமார் 20 கி. மீ, தூரத்தில் இருக்கிறது. இந்நாட்டைச் சேர்ந்த கூடலூர் இவ்வூர்க்கல்வெட்டில் குறிக்கப்பெற்றுள்ளது. இதுவேயன்றித் திருவழூந்தூர் நாட்டு ஆனாங்கூரும், இராஜராஜ வளநாட்டுப் பரவைநாட்டுப் பூண்டியும் குறிக்கப் பெற்றுள்ளன. ஊர்ச்சபை கூடிய இடம் : 1 ஒவ்வொரு சதுர்வேதி மங்கலத்திலும் ஒவ்வொரு சபை இருந்தது. அந்தச் சபையாரே கோயில் நிர்வாகத்தை நடத்தி வந்தனர். பூலோக மாணிக்கத்துச் சதுர்வேதி மங்கலத்துச் சபையார் திருவேள்விக்குடி உடையார் கோயில் எடுத்துக்கட்டியில் கூட்டங் குறைவறக்கூடியிருந்து திருவாவடுதுறை உடையார்க்குப் பழைய
1. See the Annual Reports on South Indian Epigraphy for the Year 1926 Numbers 108 - 151.
|