பக்கம் எண் :

386
 

வலக்கண்ணை யளித்தருளினான். இருகண்களையும் பெற்ற சுந்தரர் இறைவனைக் கண்களாரக் கண்டு களிப்பெய்தினார். பின்னர் திருவாயிலைக் கடந்து தேவாசிரிய மண்டபத்தை அடைந்தார்.

ஆரூர்ப் பெருமானைப் பரவையார்பால் தூதனுப்புதல் :

சுந்தரர் பூங்கோயிற் பெருமானை வணங்கச்சென்றபொழுது அவருடைய பரிசனங்களிற் சிலர் பரவையார் மாளிகையை அடைந்தனர். சுந்தரர் சங்கிலியாரை மணந்த செய்தியை முன்பே அறிந்த பரவையார் அவர்களைத் தடுத்தார். அதனை அவர்களில் சிலர் சுந்தரரிடம் சென்று கூறினர். அதனைக் கேட்ட ஆரூரர் மனங் கலங்கிச் சங்கிலியை மணந்தமையால் உண்டான வருத்தம் இது என உணர்ந்து, ஆலோசித்துக் கற்றறிந்த பெரியார் பலரைப் பரவையார்பால் தூது விடுத்தார். அவர்களும் சென்று பலவாறு எடுத்துக்கூறியும் சினந்தணியாதவராய்ப் பரவையார் 'மேலும் பேசுவீராகில் என்னுயிர் நீங்குவ துறுதி' என்று கூறினார். பெரியோர் பலரும் அஞ்சிப் புறம்போந்து நிகழ்ந்ததைச் சுந்தரரிடம் கூறினர். சுந்தரர் வருந்தியவாறிருந்தார். நடுயாமம், திருக்கோயிலில் அர்த்தயாம வழிபாடு முடிந்து அனைவரும் சென்றுறங்கினர். சுந்தரர் மட்டும் உறங்காது சிவபிரானை எண்ணி 'என்னை ஆளுடைய பெருமானே நீரே எழுந்தருளி வந்து பரவையின் பிணக்கைத் தீர்த்தாலன்றி வேறு உய்வில்லை' என்று வேண்டினார். அடியார் துயர் பொறுக்க லாற்றாத பெருமான் நள்ளிரவில் திருமாலும் காணவியலாத் திருவடிகள் நிலந்தோயச் சுந்தரர் முன் வந்தணைந்தார்.

சிவபெருமான் எழுந்தருளி வந்ததைக் கண்ட சுந்தரர் வீழ்ந்து பணிந்து எழுந்து நின்று, 'தமக்குற்ற குறையை எடுத்துக்கூறி எனக்குத் தாயினு மினிய தோழராயின் என்னுடைய துன்பத்தைப் போக்கி யருளுதல் கடன்' என்று வேண்டினார். பெருமானும், 'கவலற்க. இப்போதே பரவைபால் தூது சென்று வருகின்றோம்' என்று கூறினார். சுந்தரர் மீண்டும் இறைவனைப் பணிந்து நின்றார்.

திருவாரூர்த் திருவீதியில் சிவபிரான் நள்ளிரவில் தேவரும் சிவயோகியரும் மற்றும் பலரும் மலர்மாரி பொழிந்து பரவத் திருவீதி வழியே தூது சென்றார். தம்மைத் தொடர்ந்து வந்த தேவர்கள் முதலானோரைப் புறத்தே நிறுத்தித் தம்மைப் பூசிக்கும் சிவ வேதியர் போலப் பரவையார் மாளிகையை அடைந்தார். 'பரவையே! கதவைத்திற' என்றழைத்தார். பரவையாரும் பதை பதைப்புடன் கதவைத் திறந்தார். வந்த காரணம் வினவிய பரவையாரை நோக்கிச் சிவவேதியர், 'மறுக்காது ஏற்பதாயின் சொல்வேன்' என்றனர். எனக்கு