வடிகளைச சிந்தித்துப் போற்றினார். இறைவன் அவர் முன்னே தோன்றி 'இச்சூலை நோய் வன்றொண்டன் வந்து தீர்த்தாலன்றித் தீராது' என்று கூறினார். கலிக்காமர், 'இறைவனே! வழிவழியாக நும்மையே வழிபடும் தொண்டனுக்குற்ற நோயைப் புதியவனாகிய வன்றொண்டனோ தீர்த்தற்குரியன்; இந்நோய் தீர்க்கப்படுதல் வேண்டா' எனக் கூறினார். இறைவன் மறைந்தான். இறைவன் நம்பியாரூரரை யணுகி, 'ஏயர் கோனுற்ற சூலையைத் தீர்ப்பாயாக' எனப் பணித்தார். அவ்வுரை கேட்ட சுந்தரர் ஆரூரை விட்டு புறப்பட்டார். தாம் வரும் செய்தியை முன்னரே தெரிவிக்க ஏவலரை அனுப்பினார். வன்றொண்டர் தம் சூலை நோயைத் தீர்க்க வருகின்றார் என்றறிந்த ஏயர்கோன் அவரைக்காண விரும்பாது 'வன்றொண்டன் வருவதற்குள் என் சூலை நோயை வயிற்றொடும் கிழித்துக்கொண்டு போக்குவேன்' எனத் துணிந்து உடைவாளால் தமது வயிற்றைக் கிழத்துக்கொண்டு உயிர் நீத்தார். அவர்தம் மனைவியாரும் உடனுயிர்விடத் துணிந்தார். அதற்குள் சுந்தரர் வருகையைக் கேள்வியுற்று அவரை எதிர்கொண்டழைக்குமாறு வீட்டிலுள்ளவர்க்குப் பணித்துத் தம் கணவர் இறந்ததை மறைத்து, சுந்தரரை எதிர்கொண்டழைக்குமாறு சுற்றத்தார்களை ஏவினார். ஏயர்கோன் மாளிகையை அடைந்த நம்பியாரூரர் ஏயர்கோனைக் காணும் பெரு விருப்பத்தைத் தெரிவித்தார். அங்குள்ள பணியாளர் 'உள்ளே பள்ளி கொள்கின்றார்' என விண்ணப்பித்தனர். 'விரைவில் காணவேண்டும்; என் மனம் தெளிவு பெற்றிலது' என்று மீண்டும் கூறினார். மறுத்தற்கியலாது சுந்தரரை ஏயர்கோன் இருந்த அறைக்கு அழைத்துச்சென்றனர். உள்ளே சென்ற சுந்தரர் ஏயர்கோன் குடர் சரிந்து குருதி சோரக் கிடந்ததைக் கண்ணுற்று உள்ளம் துணுக்குற்றார். நானும் இவர் முன்பு உயிர் துறப்பேன் எனத் துணிந்து அவர் வயிற்றிற் செருகப்பட்டிருந்த குற்றுடை வாளைப்பற்றிக் கொண்டு அவ்வாளினாலேயே தம்முயிரைப் போக்க முனைந்தார். அந்நிலையில் ஏயர்கோன் உயிர்பெற்றெழுந்து சுந்தரர் கையிலிருந்த உடைவாளைப் பற்றிக்கொண்டு தடுத்து நிறுத்தினார். உயிர்பெற்றெழுந்த கலிக்காமர் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார் சுந்தரர். கலிக்காமரும் சுந்தரரை வீழ்ந்து வணங்கினார். இருவரும் அன்பினால் ஒருவரையொருவர் தழுவிக்கொண்டனர். இறைவன் திருவருளை வியந்தனர். பின்னர் சுந்தரர் ஏயர்கோனுடன் திருப்புன்கூரை யடைந்து இறைவனை வழிபட்டுத் திருப்பதிகம் பாடிப் பரவினார். பின்னர் அவருடன் திருவாரூரை அடைந்து வழிபட்டார். கலிக்காமர்
|