சேரர்கோன் பாடிய திருக்கயிலாய ஞானஉலாவை உடனிருந்து கேட்ட மாசாத்தனார் அத்தெய்வப் பனுவலைச் சோழ நாட்டுத் திருப்பிடவூரிலே வெளிப்படுத்தித் தமிழுலகிற்களித்தார். பெரிய புராணத்தில் : திருக்கயிலை மால்வரையின் அடிவாரத்தில் எண்ணிறந்த முனிவர்களும், சிவயோகியர்களும் கூடியிருந்தனர். அவர்களின் தலைவராய உபமன்யு முனிவரும் வீற்றிருந்தருளினார். அவ்விடத்தே ஆயிரம் சூரியர் ஒன்று திரண்டாற்போன்ற பேரொளி தோன்றிற்று. அதனைக் கண்ட முனிவர்கள் உபமன்யு முனிவரை நோக்கி இவ்வதிசயம் யாது எனக் கேட்டனர். திருவருளைத் தியானித்து உண்மையுணர்ந்து முனிவர் திருக்கயிலையிலிருந்து தென்திசை யடைந்து அவதரித்த நாவலூர் நம்பிகளாகிய வன்றொண்டர் மீண்டும் கயிலைக்கு எழுந்தருளுகின்றார் என்று கூறி அப்பேரொளி தோன்றிய திசையைத் தொழுதெழுந்தார். சிவபிரானையன்றிப் பிறரை வணங்காத முனிவர் பிரான் இச்சோதியை வணங்கிய காரணங்கேட்க உபமன்யு முனிவர் சிவ பெருமானைத் தம்முள்ளத்தே கொண்ட நம்பியாரூரர் நம்மால் தொழப்படும் தன்மையுடையார் என்று கூற ஏனைய முனிவர்களும் வணங்கியெழுந்து நம்பியாரூரரைப்பற்றிக் கூறுமாறு கேட்டறிந்தனர் என்பது திருத்தொண்டர் புராணத்துள் சுந்தரர் வரலாற்றுத் தொடக்கம். மாதவம் செய்த தென்திசை வாழ்ந்திடத் தீதிலாத் திருத்தொண்டத்தொகை அருளுவதற்காகவே சுந்தரர் அவதாரம் செய்தருளினார் என்பது சேக்கிழார் பெருமான் திருவுள்ளம். 'நேசம் பெருமையினை எல்லாவுயிரும் தொழ எடுத்துத் தேசமுய்யத் திருத்தொண்டத்தொகை முன் பணித்த திருவாளன், வாச மலர்மென் கழல் வணங்க வந்தபிறப்பை வணங்குவாம்' என்று சுந்தரர் பெருமானைத் துதிக்கின்றார் சேக்கிழார். தேவராத் திருமுறைகளில் ஏழாந்திருமுறையாகத் தொகுக்கப் பெற்றுள்ளது சுந்தரர் செந்தமிழ். அவற்றுள் சுந்தரர் பாடியருளிய திருத்தொண்டத் தொகைத் திருப்பதிகமே பெரிய புராணம் தோன்றுதற்குக் காரணமாயிருந்தது, தென்தமிழ்ப் பயனாய் வந்த திருத்தொண்டத் தொகை எனச் சேக்கிழாரடிகள் இதனைச் சிறப்பித்துப் போற்றுவர். இத்திருப்பதிகமாகிய தொகையின் வகைநூலாக நம்பியாண்டார் நம்பிகள் திருத்தொண்டர் திருவந்தாதி என்னும் நூலை
|