பக்கம் எண் :

397
 

இயற்றச் சேக்கிழார் பெருமான் சுந்தரரையே பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பெரியபுராணமென்னும் பெருங் காவியத்தை இயற்றி யுள்ளார். பெரியபுராணம் தொடக்கம் முதல் முடிவு வரை சுந்தரர் வரலாற்றைத் தொடர்பாக விரித்துரைக்கும் முறையில் அழகுற அநை்ததுள்ளது.

தடுத்தாட்கொண்ட புராணம், ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம், கழறிற்றறிவார் புராணம், வெள்ளானைச் சருக்கம் ஆகியவற்றில் சுந்தரர் வரலாறு கூறப்படுவதோடன்றி ஒவ்வொரு சருக்கத்திறுதியிலும் சுந்தரர் வாழ்த்து அமைந்துள்ளது.

சுந்தரர் காலம் :

சுந்தரமூர்த்தி சுவாமிகள் காலத்தை அறிஞர்கள் பலரும் ஆராய்ந்துள்ளனர். அவற்றையெல்லாம் தொகுத்துப் பன்னிரு திருமுறை வரலாறு என்னும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்து வெளியீட்டில் துணைப் பேராசிரியர் வித்துவான். திரு. க. வெள்ளை வாரணனார் அவர்கள் ஆராய்ந்து தெளிவு செய்துள்ளார்கள். அவர்கள் வழிநின்று சுந்தரர் காலத்தைக் காண்போம்.

சுந்தரர் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் காலங்களுக்குப்பின் திருவவதாரம் செய்தவர் என்பது வெளிப்படை. சுந்தரர் தம் பதிகங்களை ஆராயின் திருத்தொண்டத்தொகையில் அறுபத்து மூன்றடியார்களைப் பரவியுள்ளமையின் அவர்கள் காலத்துக்குப்பின் வாழ்ந்தவர் என அறியலாம். அவ்வடியார்களில் சிலர் சுந்தரரின் சமகாலத்தவராகவும் உள்ளனர்.

சுந்தரர் தம் காலத்தில் தமிழகத்தில் பெரு வேந்தனாகவும் சிறந்த சிவனடியாராகவும் வேந்தனொருவனைக் 'கடல் சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான் காடவர்கோன் கழற் சிங்கனடியார்க்கும் அடியேன்' என்று திருத்தொண்டத்தொகையுள் போற்றியுள்ளார்.

இத்தொடரில் 'காக்கின்ற' என்ற நிகழ்காலப் பெயரெச்சம் கழற்சிங்கன் சுந்தரர் காலத்தில் வாழந்தவன் என்பதைத் தெரிவிக்கிறது. காடவர் என்ற பெயர் பல்லவ மரபினரின் பெயர். கழல் என்பது பெருவீரன் என்பதைக் குறிக்கும் அடைமொழி. சிங்கன் என்ற பெயர் பல்லவ மன்னர்களில் இரண்டாம் நரசிங்கவர்மனாகிய இராசசிம்மப் பல்லவனையே குறிக்கின்றதென திரு. வெள்ளை வாரணனார்