அவர்கள் தெளிவு செய்துள்ளார்கள். அவன் கி. பி. 690 முதல் கி. பி. 720 வரை காஞ்சிமாநகரிலிருந்து ஆட்சி புரிந்த சிறந்த சிவபக்தன். மேலும் பூசலார் காலத்தில் காஞ்சிக் கைலாசநாதர் கோயிலைக் கட்டியவனும் இம்மன்னனே யாவன். இவனது சிவபத்திச் சிறப்பையும், பெரு வீரத்தையும் குறிக்கும்பட்டப் பெயர்கள் பல. சுந்தரர் பாடிய திருப்பதிகத்தில் 'உரிமையால் பல்லவர்க்குத் திறைகொடா மன்னவரை மறுக்கம் செய்யும் பெருமையார்' என்னும் தொடரில் குறிக்கபெற்ற பல்லவனும் இராசசிம்மப் பல்லவனாகிய இரண்டாம் நரசிங்கவர்மனேயாவன். சுந்தரரை மகன்மைகொண்டு வளர்த்த மன்னன் திருமுனைப்பாடி நாட்டை ஆட்சி புரிந்த நரசிங்கமுனையரையன் என்று பெரிய புராணம் கூறுகின்றது. இம் மன்னன் இரண்டாம் நரசிம்ம வர்மனின் கீழ்த் திருமுனைப்பாடி நாட்டை யாண்ட குறுநில மன்னனாவன். தம் பேரரசன் பெயரைத் தன் பெயரோடு இணைக்கப்பெற்ற நிலையில் இவன் பெயர் நரசிங்க முனையரையன் என வழங்குகின்றது. சுந்தரரும் சேரமான் பெருமாளும் சமகாலத்தவர். சேரமான் பெருமாள், சுந்தரர் இருவரும் பாண்டிய நாடடைந்தபோது பாண்டிய மன்னனும், சோழனும் வரவேற்றனர். கொல்லம் ஆண்டின் தொடக்கத்தோடு, சேரமான் பெருமாளின் ஆட்சிக் காலத்தை இணைத்து கி. பி. 825 - க்கு முன்னும் பின்னும் எனக் கூறுதல் பொருந்தாதெனப் பலரும் மறுத்துள்ளனர். சுந்தரரை வரவேற்ற பாண்டியன் கோச்சடையன் ரணதீரன் (கி. பி. 670 - 710). எனவே சுந்தரமூர்த்தி சுவாமிகள் காலம் கி. பி. ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதியும், எட்டாம் நூற்றாண்டின் தொடக்கமுமாகிய காலப்பகுதியே யாகும். அகச்சான்றுகள் : தாய்தந்தையர், மரபு, பெயர். ஊர் : சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரத் திருப்பதிகக் குறப்புக்களில்
|