பக்கம் எண் :

414
 

ஞான ஆரூரரைச் சேரனையல்லது நாமறியோம்
மானவ ஆக்கையொடும் புக்கவரை வளரொளிப்பூண்
வானவராலும் மருவற்கரிய வடகயிலைக்
கோனவன் கோயிற் பெருந்தவத்தோர் தங்கள் கூட்டத்திலே.       

- தி. 11 திருத்தொண்டர் திருவந்தாதி, 86

"களையா உடலோடு சேரமான் ஆரூரன்
விளையா மதம்மாறா வெள்ளானை மேல்கொள்ள"

- தி. 9 திருவிசைப்பா, 189

இவ்வாறுள்ள பகுதிகள் சுந்தரர் வரலாற்றை விளக்கும் அகச்சான்றுகளாகும்.