3. | மன்னேமற வாதேநினைக் | | கின்றேன்மனத் துன்னைப் | | பொன்னேமணி தானேவயி | | ரம்மேபொரு துந்தி | | மின்னார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் | | நல்லூரருட் டுறையுள் | | அன்னேஉனக் காளாய்இனி | | அல்லேன்என லாமே. | | 3 |
"மனத்து" என, வேண்டா கூறியது, 'உன்னை நினையாத மனம் கோளில் பொறிபோலக் குணம் இலதாமன்றே' என, அதன் பயனையும், அது பொறாமையையும் நினைந்து, "பேயாய்" என்பதில் உள்ள ஆக்கச் சொல் உவமை குறித்து நின்றது, "ஆள்வா ரிலிமா டாவேனோ" (தி. 8 திருவா. 21. 7) என்பதிற்போல. பேய், பயனின்றி விரையத் திரிதலின், அச்செயற்கு அஃது உவமையாயிற்று. அலமரலை மிக உடைமை பற்றியே பேய்க்கு, 'அலகை' என்னும் பெயர் உளதாயிற்று. திரிந்தமை இன்பத்தைப் பெறுதற்பொருட்டும், எய்த்தமை அது பெறாமையானும் என்க. ஆயன் - உயிர்களாகிய ஆயத்தை (பசுக் கூட்டத்தை) உடையவன். 'ஆயாய்' என்பதே பாடம் எனலுமாம். இத் திருப்பாடல், சுவாமிகள் இப்பிறப்பில் தம் இளைய காலத்து நிலையை நினைந்து அருளிச்செய்தது. 3. பொ-ரை: தலைவனே, கரையை மோதி, பொன்னும் மணியும், வயிரமும் ஆகிய இவற்றைத் தள்ளிக்கொண்டு, ஒளிமிக்கு வருகின்ற பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியுள்ள தாய் போன்றவனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, 'அடியவன் அல்லேன்' என்று எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ! இனிமேல், உன்னை என் மனத்தில் ஒருபோதும் மறவாமலே நினைப்பேன். கு-ரை: 'நினைப்பேன்' என எதிர்காலத்தால் அருளற் பாலதனைத் திட்பம் எய்துவித்தற் பொருட்டு, 'நினைக்கின்றேன்' என நிகழ்காலத்தால் அருளினார். "பொன்னே" முதலிய ஏகார எண்களின் இறுதியில் தொகுக்கப்பட்ட, 'இவற்றை' என்பதனை விரித்து, 'உந்தி' என்பதனோடு முடிக்க. "பொருது" என்பதற்கு, 'கரை' என்னும் செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது.
|