17. | சிங்கத்துரி மூடுதிர் தேவர்கணந் | | தொழநிற்றீர்பெற் றமுகந் தேறிடுதிர் | | பங்கம்பல பேசிடப் பாடுந்தொண்டர் | | தமைப்பற்றிக்கொண் டாண்டு விடவுங்கில்லீர் | | கங்கைச்சடை யீர்உம் கருத்தறியோம் | | கண்ணுமூன்றுடை யீர்கண்ணே யாய்இருந்தால் | | அங்கத்துறு நோய்களைந் தாளகில்லீர் | | அடிகேள்உமக் காட்செய அஞ்சுதுமே. | | 7 |
18. | பிணிவண்ணத்த வல்வினை தீர்த்தருளீர் | | பெருங்காட்டகத் திற்பெரும் பேயும்நீரும் | | துணிவண்ணத்தின் மேலும்ஓர் தோலுடுத்துச் | | சுற்றுநாகத்த ராய்ச்சுண்ண நீறுபூசி |
7. பொ-ரை: கங்கையை உடைய சடையை உடையவரே, இறைவரே, நீர், வேட்டுவர் போலச் சிங்கத்தின் தோலைப் போர்த்துக் கொள்வீர் ஆயினும், தேவர் கூட்டம் வணங்க நிற்பீர். யானை முதலியன இன்றி எருதை விரும்பி ஊர்வீர் ஆயினும், 'இவர் சிலரை ஒட்டி அடிமைகொள்ளல் எற்றிற்கு' என உம்மைப் பலரும் பல குறை சொல்லுமாறு, பாடவல்ல, தொண்டர்களை வலிந்து ஈர்த்து அடிமை கொண்டு, அவர்களை விடவும் மாட்டீர் அதனால், உம் கருத்தினை நாங்கள் அறியகில்லோம். கண்களோ மூன்றுடையீர் ஆயினும், நாங்கள் உம் எதிர் நின்று அகலாதிருக்கின்றோம் என்றால், நீர் எங்கள் உடம்பில் பொருந்தியுள்ள நோயைத் தீர்த்துப் பணிகொள்ள மாட்டீர் ஆகலின், அடியோங்கள் உமக்கு ஆட்பட்டுப் பணி செய்ய அஞ்சுவேம். கு-ரை: "சிங்கம்" என்றது, நரசிங்கத்தை. திருமால் நரசிங்கமாய்த் தோன்றி இரணியனை அழித்து அவன் குருதியைப் பருகினமையால் செருக்குற்று உலகத்தை் அழிக்கத் தொடங்க, தேவர்கள் முறையீட்டிற்காகச் சிவபெருமான் சரபமாய்த் தோன்றி, அதனை அழித்து, அதன் தோலைப் போர்த்துக்கொண்டான் என்பது புராண வரலாறு. இதனைச் சரபோபநிடதமும் கூறும். "கண்ணேயாய்" என்றதில், "கண்" என்றது முன் இடத்தை; அது, "கண்ணின்று கண்ணறச் சொல்லினும்" (குறள். 184). என்பதனாலும் அறியப்படும். 'கருத்தாயிருந்தால்' என்பதும் பாடம். 8. பொ-ரை: எம்பெருமானிரே, இறைவரே, நீர், பிணிக்கும் இயல்பினையுடைய எங்கள் வலியவினையை நீக்கி அருள் பண்ணு
|