| மணிவண்ணத்தின் மேலும்ஓர் வண்ணத்தராய் | | மற்றும்மற்றும் பலபல வண்ணத்தராய் | | அணிவண்ணத்த ராய்நிற்றீர் எம்பெருமான் | | அடிகேள்உமக் காட்செய அஞ்சுதுமே. | | 8 |
19. | கோளாளிய குஞ்சரங் கோளிழைத்தீர் | | மலையின்தலை யல்லது கோயில்கொள்ளீர் | | வேளாளிய காமனை வெந்தழிய | | விழித்தீர்அது வன்றியும் வேய்புரையும் |
கின்றிலீர்; அன்றியும், பெரிய காட்டிடத்திற் பெரிய பேயும் நீருமாய்த் துணிந்து நிற்கின்ற தன்மையின் மேலும், தோல் ஒன்றை உடுத்து, அதன் மேற் சுற்றிய பாம்பை உடையவராய், சாம்பலை நறுமணப் பொடியாகப் பூசிக் கொண்டு, நீல மணிபோலும் நிறத்தின் மேலும் மற்றொரு நிறத்தை யுடையவராய், அதன்மேலும் பற்பல நிறத்தை உடையவராய், எவ்வாற்றானும் அழகிய வடிவத்தை உடையவராகியே நிற்றலால் அடியோங்கள் உமக்கு ஆட்பட்டுப் பணிசெய்ய அஞ்சுவேம். கு-ரை: 'எல்லாம் வல்லிராகிய உம்மை யாது செய்து உவப்பிப்பேம் என அஞ்சுகின்றேம்' என்றவாறு, 'நும் குறை எம்மால் முடிந்தது என உவந்து எமக்கு நீர் அருளல் இல்லை; எம் அன்பு மாத்திரைக்கே அருள்வீர்' என்பது உள்ளுறைப் பொருள். "நீரும்" என்புழி, 'ஆய்' என்பதும், "சுண்ணம்" என்புழி, 'ஆக' என்பதும் தொகுத்தலாய் நின்றன. "நாகத்தராய்" முதலியன, இடவழுவமைதி. மணிவண்ணம், உமையுடையது; "ஓர் வண்ணம்" என்றது, மாணிக்க வண்ணத்தை; அதுவே சிவபிரானுடையது. மற்றும் பல பல வண்ணமாவன, அடியார்கள் பொருட்டும் உலகத்தை நடத்துதற் பொருட்டும் கொள்ளும் வடிவங்கள். இறைவனைச் சார்ந்த பொருள் யாதாயினும் அஃது அழகுடையதாகி அவனுக்குப் பேரழகு செய்வதல்லது பிறிதாகாமையின், "அணிவண்ணத்தராய்" என்று அருளினார். 9. பொ-ரை: எம்பெருமானிரே, இறைவரே, நீர், கொலைத் தொழிலை மேற்கொண்ட யானையைக் கொல்லுதல் செய்தீர்; மலை உச்சியில் அல்லது கோயில் கொள்ளமாட்டீர்; வேட்கையை விளைக்கும் அம்பினை ஏவிய காமனை வெந்து அழியுமாறு அழித்தீர்; அதற்கு மாறாயும், மூங்கில் போலும் தோள்களை யுடையவளாகிய, 'உமை' என்னும் நங்கையை ஒருபாகத்தில் உடையீர்; நும் அடியவர்க்கு, உடுக்
|