பக்கம் எண் :

449
 
தோளாள்உமை நங்கையொர் பங்குடையீர்

உடுகூறையுஞ் சோறுந்தந் தாளகில்லீர்

ஆளாளிய வேகிற்றீர் எம்பெருமான்

அடிகேள்உமக் காட்செய அஞ்சுதுமே.

9

20.பாரோடுவிண் ணும்பக லுமாகிப்

பனிமால்வரை யாகிப் பரவையாகி

நீரோடுதீ யுந்நெடுங் காற்றுமாகி

நெடுவெள்ளிடை யாகி நிலனுமாகித்

தேரோட வரையெடுத் தவரக்கன்

சிரம்பத்திறுத் தீரும் செய்கையெல்லாம்

ஆரோடுங்கூ டாஅடி கேள்இதுஎன்

அடியோம்உமக் காட்செய அஞ்சுதுமே.

10

 

கின்ற கூறையையும், உண்கின்ற சோற்றையும் கொடுத்து ஆளமாட்டீர்; அடியவரை அடிமை கொள்ளுதல் மட்டுமே வல்லீர்; அதனால், அடியேங்கள். உமக்கு ஆட்பட்டுப் பணிசெய்ய அஞ்சுவேம்.

கு-ரை: 'யானையை வெறுப்பீர், மலைக்கண் வாழ விரும்புதல் என்னை?' என்றவாறு. "ஆளிய" மூன்றனுள், முதலன மூன்றும் பெயரெச்சங்கள்; அவை, 'ஆண்ட' என டகரம் பெற்று வரற்பாலன, இகரம் பெற்று வந்தன. இறுதியது, 'செய்யிய' என்னும் வினையெச்சம். 'ஆளா ளியவே கற்றீர்' என்பதும் பாடம்; வேள் - வேட்கை; முதனிலைத் தொழிற்பெயர்; அது, காரியவாகுபெயராயிற்று.

10. பொ-ரை: இறைவரே, மண்ணுலகமும் விண்ணுலகமும் ஆகியும், மலை ஆகியும், கடல் ஆகியும், எவ்விடத்தும் இயங்குகின்ற காற்றும் ஆகியும், எல்லையற்ற வெளி ஆகியும், நிலம் ஆகியும் இவ்வாறு எல்லாப் பொருளும் ஆகி நின்றீர். இனி, தனது ஊர்தி தடையின்றி ஓடுதற் பொருட்டு நுமது மலையைப் பெயர்த்த அரக்கனது தலைகள் பத்தினையும் நெரித்தீர். உம்முடைய இச்செய்கைகள் எல்லாம், யார் செய்கையோடும் ஒவ்வா; இஃது என்! இவற்றால் அடியோங்கள் உமக்குப் பணிசெய்ய அஞ்சுவேம்.

கு-ரை: 'இஃது என்' என்றது, பெரியோனது பேராற்றலை யறிந்து துணுக்குற்ற அச்சக் குறிப்பு.