பக்கம் எண் :

45
 

சுந்தரர் பாடியருளிய தேவாரத் திருப்பதிகங்களில், அவர் தம் வரலாற்று அகச்சான்றுகள், அவர் இறைவன்பால் கொண்டிருந்த பக்திமை, தோழமை உரிமை முதலியன விளங்கக் காணலாம்.

'அன்று வந்தெனை அகலிடத்தவர் முன்

ஆளதாக என்று ஆவணங்காட்டி

நின்று வெண்ணைநல்லூர் மிசை ஒளித்த

நித்திலத்திரள் தொத்தினை'

(தி. 7 ப. 62 பா. 5)
 

'அற்புதப்பழ ஆவணம் காட்டி அடியனாய்

எனை ஆளதுகொண்ட

நற்பதத்தினை'

(தி. 7 ப. 68 பா. 6)
 

'தன்மையினால் அடியேனைத்தாம் ஆட்கொண்ட

நாட் சபைமுன்

வன்மைகள் பேசிட வன்றொண்டன் என்பதோர்

வாழ்வு தந்தார்'

(தி. 7 ப. 17 பா. 2)

என்பன போன்ற படல்களால் இறைவன் சுந்தரரைத் தடுத்தாட் கொண்டருளிய வரலாறு கூறப்படுதலைக் காணலாம் இவ்வாறே அவர்தம் வரலாற்றுக் குறிப்புக்கள் பலவும் அவர் தம் தேவாரத்துள் குறிக்கப்படுகின்றன.

சரியை, கிரியை, யோகம், ஞானம், என்பனவற்றுள் யோகநெறி நின்றவர் சுந்தரர் என்பது திருத்துறையூர் இறைவர்பால் தவநெறி வேண்டிப் பெற்றதன் மூலம் அறியலாம்.

சுந்தரர்க்கு இறைவன் தன்னைத் தோழனாகத் தந்தார். தோழமையுரிமையோடு தம்மோடு பழகி, மண் மீது விளையாடுக என அருளிச் செய்தார் என்பது வரலாறு.


'தன்னைத் தோழமை அருளித் தொண்டனேன் செய்த
துரிசுகள் பொறுக்கும் நாதன்'

(தி. 7 ப. 68 பா. 8)

'ஏழிசையாய் இசைப்பயனாய் என்னுடைய தோழனுமாய்
யான் செய்யும் துரிசுகளுக்கு உடனாகி'

(தி. 7 ப. 51 பா. 10)